Categories: சினிமா

நீங்க போய் இப்படி பண்ணலாமா..? கூப்பிட்டு வச்சு அட்வைஸ் பண்ண சென்சார் போர்டு அதிகாரி.. மன்னிப்பு கேட்ட நாகேஷ்..!

Spread the love

தமிழ் சினிமாவில் 60 மற்றும் 70 காலகட்டத்தில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் நாகேஷ். நடிப்பு மீது இருந்த மிகுந்த ஆர்வம் காரணமாக அரசு வேலையை தூக்கி எறிந்து விட்டு நடிக்க வந்தவர். துவக்கத்தில் பல அவமானங்களை சந்தித்து இருந்தாலும் தொடர்ந்து தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் பலரையும் கவர்ந்தவர்.

அழகாக முகம் இல்லை, ஒல்லியான தேகம் என பல குறைகள் ஆரம்பத்தில் இவரை நோகடித்தது, ஆனால் எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர் உள்ளிட்ட பல ஹீரோக்களின் படங்களில் காமெடி நாயகனாக நடித்தவர் நாகேஷ். ஒரே நாளில் ஐந்து படங்களில் நடிக்கும் அளவுக்கு மிகவும் பிசியாக இருந்தவர். ஒரு காலகட்டத்தில் எம்ஜிஆர், சிவாஜி எல்லாம் நாகேசுக்காக காத்திருந்த காலமும் இருந்தது.

பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருந்த இவர் சற்று வயதான பின்னர் குணசத்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பல திரைப்படங்களில் தாத்தா வேடத்தில் நடித்து அசத்தியிருக்கின்றார். இவருடைய ஒரு திரைப்படத்தின் சம்பவத்தை பற்றி தான் எந்த தொகுப்பில் நாம் பார்க்க போகிறோம். 1963ஆம் ஆண்டு சிவாஜி, தேவிகா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் அன்னை இல்லம்.

இப்படத்தை பி மாதவன் இயக்கி இருப்பார். இப்படத்தில் நாகேஷ் அவர்கள் திக்குவாய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் மிகச்சிறப்பாக நடித்து அசர வைத்திருந்தார். இந்த படத்தை பார்த்த சாஸ்திரி என்னும் சென்சார் அதிகாரி நாகேஷ் அவர்களை பார்ப்பதற்கு அழைத்துள்ளார். அவரும் அங்கு சென்று இருக்கிறார். படம் நன்றாக இருக்கின்றது. ஆனால் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

வாய் பேச முடியாதவர்கள், திக்குவாய் உள்ளவர்கள் இப்படத்தை குடும்பத்துடன் பார்த்தால் எவ்வளவு மன வேதனைப்படுவார்கள். அவர்களை அசிங்கப்படுத்துவது போல் இருக்கும் அல்லவா என்று எடுத்துக் கூற அப்போதுதான் அவருக்கு உரைத்திருக்கின்றது. உடனே நாகேஷ் அவரிடம் மன்னிப்பு கேட்டு உண்மைதான் தெரியாமல் செய்துவிட்டேன்.

இனிமேல் இதுபோன்ற ஊனமுற்றோர் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம். அந்த சென்சார் அதிகாரி சாஸ்திரி நினைத்திருந்தால் நாகேஷிடம் சொல்லாமல் அப்படத்திலிருந்து அவரின் காட்சிகளை நீக்கி இருக்க முடியும். ஆனால் அவரை பண்புடன் அழைத்து தன்மையாக பேசி அவருடைய தப்பை புரிய வைத்து இது போன்று இனிமேல் அவர் செய்யக்கூடாது என்பதை உணர்த்தி இருக்கின்றார். இந்த சம்பவத்தை தனது பேட்டியில் பகிர்ந்து இருக்கின்றார் சித்ரா லட்சுமணன்.

Mahalakshmi

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

1 மணத்தியாலம் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

1 மணத்தியாலம் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

1 மணத்தியாலம் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

1 மணத்தியாலம் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

2 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

2 மணத்தியாலங்கள் ago