நிஜமாவே எழில் சீரியலை விட்டு ஏன் போனாருன்னு தெரியல.. ஒரு அப்பாவா நான் இதை அவருக்கு சொல்றன்.. கோபி வெளியிட்ட வீடியோ..!!

By admin on வைகாசி 23, 2024

Spread the love

விஜய் டிவியில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் வி.ஜே விஷால் நடித்தார். இந்த சீரியல் மூலமாகத்தான் அவர் பிரபலமானார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெடி ஸ்டெடி போ என்ற நிகழ்ச்சியை மாகாபாவோடு இணைந்து அவர் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார்.

அதுல நம்பிக்கை இல்ல… பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய… விஜே விஷாலின் முதல் பதிவு! - CineReporters

   

ஒரு சில ஷார்ட் பிலிம்ங்களிலும் விஷால் நடித்துள்ளார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக விஷால் சீரியலில் இருந்து விலகிவிட்டார். அவர் சீரியலில் இருந்து வெளியேறியதற்கான காரணம் தெரியவில்லை. அவருக்கு பதிலாக நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 சீரியலில் நடிக்கும் நவீன் எழில் கதாபாத்திரத்தில் தற்போது நடிக்கிறார்.

   

பாக்கியலட்சுமி சீரியலிருந்து விஜே விஷால் விலக காரணம்? வெளிப்படையாக பேசிய கோபி.. இதுதான் விஷயமா? | Actor sathish about Vj vishal quite from baakiyalakshmi serial - Tamil ...

 

 

இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் சதீஷ்குமார் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது, இதுவரை எழிலாக நடித்த விஷால் சீரியலில் இருந்து விலகிவிட்டார். அவர் கேரக்டரில் இன்னொரு நடிகர் நடிக்கிறார். அவருக்கு எனது ஆசிகளும் வாழ்த்துக்களும். அவர் நன்றாகத்தான் நடிக்கிறார்.

எங்க போனாலும் திட்டுறாங்க… இது வெறும் நடிப்பு… பாக்கியலட்சுமி சீரியல் கோபி உருக்கம் ! | Baakiyalakshmi serial Sathish kumar emotional video on instagram - Tamil Filmibeat

விஷால் எதற்காக சீரியலில் இருந்து விலகினார் என்பது உண்மையிலே எனக்கு தெரியாது. அவர் எதையும் சொல்லவில்லை. ஆனால் சிறகு முளைத்து இங்கிருந்து பறந்து போக வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கு நான் தந்தையாக என்ன சொல்ல வேண்டும். பத்திரமா பார்த்து வானத்தில் பறக்க வேண்டும் என்று தான் சொல்லி அனுப்ப முடியும்.

எங்க போனாலும் திட்டுறாங்க… இது வெறும் நடிப்பு… பாக்கியலட்சுமி சீரியல் கோபி உருக்கம் ! | Baakiyalakshmi serial Sathish kumar emotional video on instagram - Tamil Filmibeat

அதைத்தான் அவருக்கு கூறி இருக்கிறேன். எங்க போனாலும் நல்லபடியாக இருக்க வேண்டும். நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நீங்களும் அவரது பியூச்சர் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று ஆசீர்வாதம் கொடுங்கள் என பேசியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.