‘BATA’ இந்திய நிறுவனம் அல்ல.. இருந்தாலும் இந்திய குடும்பங்களின் பிராண்டாக மாறியது எப்படி..? உருவான கதை..!

By Mahalakshmi on மே 23, 2024

Spread the love

பாட்டா என்ற நிறுவனம் இந்திய நிறுவனமாக இல்லாத போதிலும் இந்தியர்களை அதிக அளவில் கவர்ந்து மிகப்பெரிய நிறுவனமாக இந்திய குடும்பங்களில் ஒரு அங்கமாகிய பயணம் ஒரு ஆச்சரியமானது. காலணிகளை பற்றி நாம் பேசுவதென்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது பேட்டா என்கின்ற பிராண்டு தான். இந்திய கலாச்சாரத்துடன் நெருங்கியதாக மாறி இருக்கும் பேட்டா இந்தியா பிராண்ட் என்று பலரும் கூறினாலும் அது உண்மையல்ல.

பேட்டா செக்கோஸ்லோவாகியாவை சேர்ந்த நிறுவனம் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. செக்கோஸ்லோவாகியாவின் ஒரு குடும்பத்துக்கு சொந்தமான நிறுவனமாக உருவாக்கப்பட்ட பேட்டா, கடல் மற்றும் கலாச்சாரத்தை தாண்டி தற்போது இந்திய குடும்பங்களில் ஒரு அங்கமாக மாறி இருக்கின்றது. 1894 ஆம் ஆண்டு செக்கஸ்லோவாகியாவை சேர்ந்த ஷூ மேக்கர் தாமஸ் பேட்டா மற்றும் அவரது சகோதரரான அன்டோனின், தங்கை ஆனா ஆகியோருடன் சேர்ந்து பேட்டா தயாரிப்புகளை உருவாக்கினார்.

   

   

பேட்டாவின் மகன் ஜான் ஆன்டானின் தலைமையில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. மக்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் உலக அளவில் உற்பத்தியை பெருக்கியது. 1931இல் பேட்டா நிறுவனம் இந்தியாவில் கொல்கத்தாவுக்கு அருகில் உள்ள கொன்நகரில் தனது முதல் ஆலயத்தை அமைத்து தனது பயணத்தை தொடங்கியது. காலநிலைக்கு ஏற்றவாறும் மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறும் ரப்பர் மற்றும் கேன்வாஸ் ஷூக்களுடன் உள்ளூர் சந்தையில் பாட்டா நிறுவனம் நுழைந்தது.

 

1939 ஆம் ஆண்டு பாட்டாவின் தடம் இந்தியாவில் கணிசமாக விரிவடைந்து. 86 கடைகள் மூலம் 3500 ஜோடி காலணிகளை ஒரு வாரத்தில் விற்பனை செய்ய தொடங்கியது. இதனையடுத்து கொன்நகர் பகுதி பேட்டா நகர் என்ற பெயருடன் மாறியது. இந்தியாவின் தாராளமயமாக்கல் கொள்கையால் 1980 ஆம் ஆண்டு காதிம்ஸ் மற்றும் பேரகான் போன்ற கால நிறுவனங்கள் தோன்றியன.

இவை பாட்டா நிறுவனத்திற்கு கடும் போட்டியை கொடுத்தது இருந்தாலும் சற்றும் சாலைக்காமல் வித்தியாசமாக வெல்போம் ஷூ போன்ற டிசைன்களை தயாரித்து மீண்டும் மறுமலர்ச்சியுடன் சந்தையில் இறங்கியது பேட்டா. பேட்டா நிறுவனத்தை அதிக அளவில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது. அதன் விளம்பரங்கள் தான் பேட்டா நிறுவனம் பல துணை பிராண்டுகளுடன் வலம் வருகின்றது.

ஹஸ் பப்பீஸ் ஸ்லீப்பர்கள் அறிமுகம் பிரிமியம் பிரிவில் பேட்டாவின் மதிப்பை மேலும் அதிகப்படுத்தியது. ஹேண்ட் பேக்குகள், சன் கிளாஸ்கள் என புதிய தயாரிப்புகளை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் முழுமையான ஷாப்பிங் அனுபவத்தை அளிக்க தொடங்கியது. பேட்டா 2024 ஆம் ஆண்டு நாடு முழுவதும் 1375 க்கு மேற்பட்ட கடைகளுடன் மிகப் பெரிய சில்லறை விற்பனை நிறுவனமாக மாறி இருக்கிறது.

உலக அளவில் பாட்டா 82 நாடுகளில் 17 மில்லியனுக்கும் அதிகமான ஜோடி காலணிகளை விற்பனை செய்கின்றது. இந்தியாவில் மட்டும் 30,000 டீலர்கள் மற்றும் 1375 storeகள் இருக்கின்றன. பேட்டா 2023-24 நிதியாண்டில் 30 சதவீதம் சரிவை எதிர் கொண்டிருந்தாலும் தற்போதைய புதிய தலைமுறைகளை ஈர்ப்பதற்காக பேட்டா புதிய யுத்தியை யோசித்து தான் ஆக வேண்டும். புதிய யுக்தியை கையாண்டு தற்போது இருக்கும் பிராண்டுகளுக்கு ஏற்றவாறு காலணிகளை மாற்றி அமைத்து உற்பத்தியை எப்படி பேட்டா நிறுவனம் தக்க வைக்க இருக்கின்றது என்பது மிகப்பெரிய சவால்தான்.

பேட்டாவின் பாரம்பரியத்தை யாராலும் மறக்க முடியாது. ஆனால் ஒரு துறையில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் புதுமை கட்டாயம் அவசியம். தற்போதைய ட்ரெண்டுக்கு தகுந்த டிசைன்களில் கவனம் செலுத்தி அதனை இளம் வடிவமைப்பாளர்களுடன் இணைந்து செயல்படுத்தினால் புரிய மாற்றத்தை கட்டாயம் கொண்டுவர முடியும்.