தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் பல இளைஞர்களின் கனவு கனியாக இருந்த நடிகை சுவலட்சுமி. அப்போது எந்த ஒரு கிசுகிசுவில் சிக்காத ஒரு நடிகை. அவரைக் குறித்து மூத்த பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றில் பேசியிருக்கின்றார். அமைதியான அழகான முகபாவம் கொண்ட சுபலட்சுமி முதன்முதலாக 1994 ஆம் ஆண்டு உத்தோரன் என்கின்ற பெங்காலி படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து பல மொழிகளில் நடித்து வந்த இவர் மணிரத்தினத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட ஆசை திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். முதல் படத்திலேயே அனைவரது மனதிலும் நீங்க இடத்தை பிடித்த இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. பின்னர் விஜய்க்கு ஜோடியாக லவ் டுடே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அப்படத்தில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் மிகவும் அழகாக நடித்திருப்பா.ர் இப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி வசூலை அள்ளியது. விஜயின் திரைப்படத்தில் இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தமிழ் சினிமாவில் விஜய், அஜித், பிரபுதேவா, கார்த்திக், சரத்குமார், முரளி உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த இவர் நடித்திருக்கின்றார். பின்னர் 2001 ஆம் ஆண்டு விஞ்ஞானியான ஸ்வகோடா பானர்ஜி என்பவரை திருமணம் செய்து கொண்டு ஸ்விஸ்சர்லாந்தில் செட்டில் ஆகிவிட்டார்.
திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்ட சுவலட்சுமி தற்போது வரை 90ஸ் கிட்ஸ்களின் பேவரிட் நடிகையாக இருந்து வருகின்றார். இந்நிலையில் இவரை குறித்து மூத்த பத்திரிக்கையாளராக பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் பேசியிருக்கின்றார். அதில் 2000 ஆண்டுக்கு பின் தமிழ் சினிமா கதாநாயகிகளே கவர்ச்சி ஆட்டம், குத்து பாடல் என நடிக்க தொடங்கி விட்டார்கள்.
இதற்கு நடிகைகளுக்கு அதிக அளவு சம்பளம் கொடுக்கப்படுகின்றது. தமிழ் படங்களில் தமிழ் பேசும் பெண்களின் நடிக்காமல் போனதற்கு காரணம் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்ற பயம் தான். தெலுங்கு, மலையாளம், பாலிவுட்டில் இருந்து வந்த நடிகைகள் அதிக கவர்ச்சி காட்டி நடிக்கிறார்கள். அதனால் பெரும்பாலான திரைப்படங்களில் அவர்களே ஹீரோயினியாக இருக்கிறார்கள்,
கவர்ச்சியாக நடித்தால்தான் நல்ல வரவேற்பைப் பெற முடியும் என்றால் நடிகை சாவித்திரி, தேவிகா, பத்மினி எப்படி சாதித்தார்கள், அது மட்டும் இல்லாமல் முன்னணி நடிகையான சுவலட்சுமி கனவு கன்னியாக இருந்த போதிலும் கவர்ச்சியாக நடிக்க மறுத்துவிட்டார். மொத்தம் 13 திரைப்படங்களில் தான் நடித்திருக்கின்றார். அதில் 7 படங்கள் சூப்பர் ஹிட். பெரும்பாலும் சேலை அல்லது சுடிதாரிலேயே வளம் வரும் இவரை கவர்ச்சியாக நடிக்க வற்புறுத்தியும் முடிவே முடியாது என்று கூறிவிட்டார்.
கமலஹாசன், ரஜினி உள்ளிட்ட படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த போதும் அதை மறுத்து விட்டார். பல நடிகர்கள் அவருக்கு காதல் வலை வீசியபோதும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தான் உண்டு தான் வேலை உண்டு என்று இருப்பவர் சுபலட்சுமி. கார்த்திக் உடன் கோகுலத்தில் சீதை என்ற திரைப்படத்தில் நடித்த போதே நடிகர் கார்த்திக் அவருக்கு ரூட் விட்டார். ஆனால் கார்த்திக்கின் வலையில் சிக்காமல் இருந்த ஒரே நடிகை சுவலட்சுமி தான் என அவரை புகழ்ந்து பேசி இருக்கின்றார் பயில்வான் ரங்கநாதன்.