“நாவடக்கம் வேண்டும்.. வீதியில் இறங்கி போராடுவோம்”.. தவெக ஆதவ் அர்ஜுனாவுக்கு எச்சரிக்கை விடுத்த கே.பி.முனுசாமி.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

Spread the love

அதிமுக முன்னாள் அமைச்சர்களான உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜு, என்.ஆர்.சிவபதி மற்றும் பல முன்னாள் எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் தங்களை அதிமுகவிலிருந்து விடுவித்துக்கொண்டு, தற்போதைய ஆளும்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளனர். இதுகுறித்து கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, அதிமுகவில் பல்வேறு பதவிச் சுகங்களை அனுபவித்தவர்களே தற்போது கட்சி மாறியுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், இந்த இணைவு விழாவில் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்துகளுக்கு அவர் தனது கடுமையான கண்டனங்களை முன்வைத்தார்.

செய்தியாளர் சந்திப்பில் ஆதவ் அர்ஜுனாவை ‘சந்தர்ப்பவாதி’ என்று சாடிய கே.பி.முனுசாமி, அவர் நெல்முள் குருவி போல வாய்ப்பு தேடி திமுக, விசிக, அதிமுக என மாறி மாறிச் சென்று, இறுதியாக தவெகவில் இணைந்து அமைச்சராகியுள்ளார் என்று விமர்சித்தார். “அதிமுக தொண்டர்கள் வாக்களித்துதான் தவெக வெற்றி பெற்றது” என்று ஆதவ் அர்ஜுனா கூறியதற்குப் பதிலடி கொடுத்த முனுசாமி, எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் தலைமைக்காக உழைக்கும் அதிமுக தொண்டர்களைக் கொச்சைப்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் நேரடியாக அவரை எதிர்த்துப் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்தார்.

தொடர்ந்து பேசிய கே.பி.முனுசாமி, அரசியலில் தர்மமும் பண்பும் இருக்க வேண்டும் என்றும், பேப்பரில் மட்டுமே எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் என்று கூறும் ஆதவ் அர்ஜுனாவுக்கு நாவடக்கம் தேவை என்றும் கூறினார். அதிமுகவையும் திமுகவையும் ‘பங்காளிகள்’ எனக் குறிப்பிட்ட அவர், தவெக என்பது ஒரு சினிமா நடிகரால் தொடங்கப்பட்ட இயக்கம் என்றார். மேலும், சட்டமன்றத் தேர்தலில் தவெகவுக்கு வாக்களித்த மக்களுக்கு அந்த இயக்கம் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாகவும், தவெகவினர் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள பிற கட்சிகளைப் பலிகடா ஆக்கி, அதிமுக மீது வன்மத்தைக் காட்டுவதாகவும் குற்றம் சாட்டினார்.

இறுதியாக, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கவிருக்கும் புதிய மக்கள் இயக்கத்திற்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த கே.பி.முனுசாமி, அவர் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றாமல் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அண்ணாமலை தனது குறுகிய அரசியல் வாழ்க்கையில் கருத்துகளை அடிக்கடி மாற்றிக் கொள்வதாகவும், தற்போது ‘கூட்டுத் தலைமை’ மற்றும் ‘யாருக்கும் எந்தப் பதவியும் நிரந்தரமில்லை’ என்ற பெரிய கருத்தைத் தெரிவித்துள்ளதாகவும் கூறிய முனுசாமி, இதனுடைய விளைவுகளைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று கூறி தனது பேட்டியை நிறைவு செய்தார்.

Muthu Mani

Recent Posts

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

4 minutes ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

8 minutes ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

9 minutes ago

“நாம் எங்கே வாழ்கிறோம்?” – பெட்ஷீட் துவைக்கப் போன புனே பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி: களத்தில் இறங்கிய காவல்துறை..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சின்ச்வாட் பகுதியில், பெண் ஒருவர் தான் வாங்கிய புதிய பெட்சீட்டில் 'மேட் இன் பாகிஸ்தான்'…

13 minutes ago

திமுகவிற்கு விழுந்த பலத்த அடி..! மொத்தமாக தவெக-வில் ஐக்கியமான 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்.. அதிர்ச்சியில் தலைமை…!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் ஆளுங்கட்சியான திமுகவிற்குப் பலத்த பின்னடைவு ஏற்படும் வகையில், அக்கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்…

15 minutes ago

“நான் பேசினது தப்பு தான்” நீதிமன்ற உத்தரவை மீறிட்டேன்… பகிங்கரமாக மன்னிப்பு கேட்ட ரவிமோகன்..!!

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விவாகரத்து வழக்கு…

16 minutes ago