நெய்மாருக்கு சவால் விட்ட கோல்கீப்பர்… உதட்டசைவை வைத்து AI கண்டுபிடித்த அதிர்ச்சி உண்மை… வைரல் வீடியோ…!

Spread the love

2026 ஃபீஃபா உலகக் கோப்பைத் தொடரின் (FIFA World Cup 2026) ‘ரவுண்ட் ஆஃப் 16’ சுற்றில் நேற்று நடைபெற்ற பிரேசில் மற்றும் நார்வே அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஒரு பரபரப்பான சம்பவம் அரங்கேறியுள்ளது. போட்டியின் இறுதிப் பகுதியில் பிரேசில் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தபோது, அந்த அணியின் நட்சத்திர வீரர் நெய்மாருக்கும், நார்வே அணியின் கோல்கீப்பர் நைலான்டுக்கும் இடையே மைதானத்தில் காரசாரமான வார்த்தை மோதல் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவி, பெரும் வைரலாகி வருகிறது.

இந்த மோதலின் போது அவர்கள் இருவரும் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதை அறிய, எக்ஸ் (X) தள பயனர் ஒருவர் ‘க்ரோக்’ எனும் ஏஐ சாட்போட்டின் உதவியுடன் அவர்களது உதட்டசைவை ஆய்வு செய்துள்ளார். அதன்படி, பெனால்டி அடிப்பதற்கு முன்பு நெய்மாரிடம் வந்த கோல்கீப்பர் நைலான்ட், “உன்னுடைய ஷாட்டை நான் நிச்சயம் தடுத்துவிடுவேன்” என்று சவால் விட்டுள்ளார். அதற்கு நெய்மார் சற்றும் யோசிக்காமல், “உனக்கு அவ்வளவு நம்பிக்கையா? சரி, பந்து கோல் போஸ்ட்டின் எந்தப் பக்கத்தில் வர வேண்டும் என்று சொல்?” எனத் திமிராகக் கேட்டுள்ளார். அதன் பின்னர் நெய்மார் மிக லாவகமாக கோல் அடித்ததோடு, நைலான்டைப் பார்த்து புன்னகைத்தபடி, “என்னிடம் உனது ஆட்டத்தைக் காட்டாதே” என்று கூறிச் சென்றதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. எனினும், இந்த உரையாடல் குறித்து நெய்மாரோ அல்லது நைலான்டோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எதையும் உறுதிப்படுத்தவில்லை.

இந்தப் போட்டியில் நெய்மார் பெனால்டி மூலம் கோல் அடித்திருந்தாலும், ஒட்டுமொத்த ஆட்டத்திலும் நார்வே அணியின் கோல்கீப்பர் நைலான்டின் பங்களிப்பு மிக அற்புதமாக இருந்தது. போட்டியின் முதல் 10 நிமிடங்களிலேயே பிரேசில் வீரர் புருனோ குய்மரைஸ் அடித்த பெனால்டி வாய்ப்பைத் தடுத்து நிறுத்தி பிரேசிலின் முன்னிலையை அவர் முறியடித்தார். அதுமட்டுமின்றி, ஆட்டம் முழுவதும் பிரேசில் அணியின் பல ஆபத்தான கோல் முயற்சிகளைத் தொடர்ந்து தடுத்து நிறுத்திய நைலான்ட், பிரேசில் அணிக்கு எதிராக நார்வே வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெறுவதற்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தார்.

SATHISH R

Recent Posts

“உன் கழுத்தை அறுத்துடுவேன்டா”…பள்ளி சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை… சிக்கிய 3 காமுகர்கள்… நீதிமன்ற வளாகத்தில் ஆவேசமடைந்த தந்தை… கதிகலங்கி நின்ற போக்சோ கைதி…!

விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு எதிராக அரங்கேறிய அடுத்தடுத்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக, கடந்த சனிக்கிழமை (ஜூலை 04) ஒரே நாளில்…

10 minutes ago

இன்று நேரில் ஆஜராகாத செந்தில் பாலாஜி…. அடுத்த 24 மணி நேரத்தில் அதிரடியாக பாய்கிறதா கைது நடவடிக்கை?…. பரபரக்கும் தமிழக அரசியல்….!

தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும்…

18 minutes ago

திடீர் திருப்பம்… அமித் ஷாவுக்கு துணைப் பிரதமர் பதவி?… அதிரப் போகும் டெல்லி…. யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்..!

மத்திய அமைச்சரவையில் விரைவில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவல் பெரும் பரபரப்பை…

22 minutes ago

சுடுதண்ணீர், பழுக்கக் காய்ச்சிய கரண்டி… “ரயில்வே தண்டவாளத்தில் போ விழுந்து செத்துடு”… ஈரோட்டில் பெத்த மகளுக்கே நடந்த கொடூரம்… நள்ளிரவில் அம்பலமான பயங்கரம்…!

ஈரோடு மாவட்டம், வெண்டிபாளையம் சீனிவாசராவ் வீதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு, முதல் மனைவி குமுதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக…

33 minutes ago

“இது தொல்லை தாங்க முடியல.. அழுத குழந்தையை சுவற்றில் வீசிய காதலன்”… அடுத்த நொடியே தாய் செய்த கொடூர செயல்… இறுதிச் சடங்கில் அம்பலமான பகீர் உண்மை.!

மயிலாடுதுறை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மூன்று வயது ஆண் குழந்தையைத் தாயும் அவரது கள்ளக்காதலனும் அடித்துக் கொலை செய்துவிட்டு,…

39 minutes ago

“உல்லாசமாக இருக்கலாம் வா…” இளம்பெண் வீசிய ஆசை வலை… ஓட்டு வீட்டுக்குள் நுழைந்த பைனான்சியருக்கு காத்திருந்த பகீர் அதிர்ச்சி…!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தம்பிபட்டி கிராமத்தைச் சேர்ந்த 40 வயதுடைய வடிவேல் என்பவர் பைனான்ஸ் தொழில் செய்து…

47 minutes ago