அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஈரானின் முன்னாள் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதிச் சடங்கு நிகழ்வைக் குறிப்பிட்டுப் பேசியுள்ள கருத்துகள் சர்வதேச அரங்கில் பெரும் சர்ச்சையையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளன. வாஷிங்டனில் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய ட்ரம்ப், காமேனியின் இறுதிச் சடங்கின் போது அந்நாட்டின் உயர்மட்டத் தலைவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடியிருந்ததை ஒரு “ராணுவ வாய்ப்பு” என்று வர்ணித்துள்ளார். தான் நினைத்திருந்தால் ஒரே ஒரு குண்டை வீசி ஈரானின் ஒட்டுமொத்த தலைமையையும் வீழ்த்தியிருக்க முடியும் என்றும், ஆனால் தற்போதைய ராஜதந்திர முயற்சிகள் மற்றும் பேச்சுவார்த்தை காரணமாக அந்த வாய்ப்பை அமெரிக்கா பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றும் அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய ட்ரம்ப், ஈரானியர்களில் பெரும்பாலானோர் காமேனியை எதிர்த்த போதிலும், இறுதிச் சடங்கில் பெருந்திரளான மக்கள் கூடியிருப்பது போலியான கண்ணீராக இருக்கலாம் என்ற விவாதத்திற்குரிய கருத்தையும் முன்வைத்துள்ளார். மேலும், அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தம் செய்துகொள்ள ஈரான் தலைவர்கள் கெஞ்சிக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்த இறுதிச் சடங்கு நிகழ்வுகள் முடியும் வரை ஒரு வார காலத்திற்கு இரு தரப்பு பேச்சுவார்த்தைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஒப்புகொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். ஈரானின் ஒட்டுமொத்த தலைவர்களையும் ஒரே நேரத்தில் அழிப்பது குறித்து ஒரு நாட்டின் அதிபர் இப்படிப் பேசியிருப்பது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரம்ப்பின் இந்த அதிரடி பேச்சுக்கு ஈரானின் தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஆர்மீனியாவில் உள்ள ஈரான் தூதரகம் இதற்கு உடனடியாகப் பதிலடி கொடுக்கும் வகையில், ட்ரம்ப்பிற்கு நாகரிகமோ, வரலாறோ, கண்ணியமோ இல்லாததால் தான் இப்படிப் பேசுகிறார் என்றும், இத்தகைய உணர்வுப்பூர்வமான விஷயங்களை அவரால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது என்றும் சாடியுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படும் சூழலில், ட்ரம்ப்பின் இந்த சர்ச்சை பேச்சு இரு நாட்டு உறவில் மீண்டும் பதற்றத்தையும் தொய்வையும் ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் டி.டி.வி. தினகரனை மீண்டும் சேர்க்க வேண்டும் என தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாகக் கோரிக்கை…
தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், அடுத்த 3 மாதங்களுக்குள் புதிதாக 2,000 மின்சார ஏசி பஸ்களை…
சென்னை வியாசர்பாடியில் உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த நான்கு மாதங்களாக வாடிக்கையாளர் போல பர்தா அணிந்து வந்து, ஊழியர்களின்…
தமிழக அரசியல் வரலாற்றில் நீண்ட காலமாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி…
ஈரோடு மாவட்டம், சக்தி சாலை செங்குந்தர் நகர் 6-வது வீதியைச் சேர்ந்த 50 வயதுடைய கண்ணன் என்பவர், அங்குள்ள காலண்டர்…
ஹரியானா மாநிலம் குர்கானைச் சேர்ந்த 21 வயது இளைஞரான மோனு, கடந்த ஜூன் 8-ஆம் தேதி இரவு மருந்து வாங்குவதற்காக…