“ஒரே ஒரு குண்டு போதும், மொத்த பேரையும்”… டிரம்ப் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. உச்சக்கட்ட கொந்தளிப்பில் ஈரான்…..!

Spread the love

அமெரிக்காவின் தாக்குதலில் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் தற்பொழுது அந்நாட்டில் நடைபெற்று வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடித்ததைத் தொடர்ந்து, தற்போது ஏற்பட்டுள்ள முதற்கட்ட போர் நிறுத்தத்திற்கு மத்தியில், சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு இந்த இறுதிச்சடங்கு தொடங்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பொதுமக்களும், ஈரானின் உயர் மட்ட தலைவர்கள் பலரும் கமேனியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தெஹ்ரானில் திரண்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசிய கருத்து சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெஹ்ரானில் ஈரானிய தலைவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடியிருப்பதைச் சுட்டிக்காட்டிய அதிபர் டிரம்ப், “ஈரான் தலைவர்கள் அனைவரும் கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்று இருக்கிறார்கள்; ஒரே ஒரு குண்டில் அனைவரையும் வீழ்த்திவிடலாம்” என்று அதிரடியாகப் பேசினார். மேலும், அப்படிச் செய்தால் பேச்சுவார்த்தை நடத்த அங்கு யாரும் இருக்க மாட்டார்கள் என்றும், ஒப்பந்தம் செய்யவே ஈரான் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். இறுதிச்சடங்கு முடியும் வரை பேச்சுவார்த்தைக்குச் சிறிது இடைவெளி விடப்பட்டுள்ளதாகவும், அதுவரை எந்தத் தாக்குதலும் நடத்தப்படாது என்றும் டிரம்ப் கூறியிருந்தாலும், அவரது இந்த மிரட்டல் தொனி ஈரானை கடும் கோபத்திற்குள்ளாக்கியுள்ளது.

டிரம்பின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு ஈரான் அரசு மிகவும் காட்டமான மற்றும் தத்துவார்த்த ரீதியிலான பதிலடியைக் கொடுத்துள்ளது. இது தொடர்பாக ஈரான் வெளியிட்ட அறிக்கையில், “உங்களால் மக்களைக் கொல்ல முடியும், ஆனால் எங்களின் சித்தாந்தத்தை ஒருபோதும் வீழ்த்த முடியாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும், “நீங்கள் ஒரு வாசனைத் திரவிய (பெர்பியூம்) பாட்டிலை உடைத்தால், அதன் நறுமணம் சுற்றிலும் உள்ள அனைத்து இடங்களுக்கும் பரவிவிடும்; இது போன்ற விஷயங்கள் எல்லாம் உங்களுக்குப் புரியப் போவதில்லை, ஏனெனில் உங்களுக்கு நாகரீகமோ, வரலாறோ, பெருமையோ கிடையாது” என்று அமெரிக்க அதிபரை நேரடியாகச் சாடியுள்ளது.

ஈரானின் பல்வேறு நகரங்களில் ஜூலை 9 ஆம் தேதி வரை இந்த இறுதி ஊர்வலங்கள் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள சூழலில், புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மொஜ்தபா கமேனி இன்னும் பொதுவெளியில் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கமேனியின் மறைவுக்குப் பின் இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த தற்காலிக அமைதியை டிரம்பின் இந்த ஒற்றை வார்த்தை மீண்டும் சீர்குலைத்துள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள இந்த இடைப்பட்ட காலத்தில், இரு நாடுகளுக்கும் இடையே வெடித்துள்ள இந்தப் புதிய வார்த்தைப்போர் மத்திய கிழக்குப் பகுதியில் மீண்டும் போர் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

Nanthini

Recent Posts

திடீ ர் திருப்பம்… அதிமுகவில் மீண்டும் டி.டி.வி. தினகரன்… தமிழக அரசியலில் அடுத்த ட்விஸ்ட்…!

அதிமுகவில் டி.டி.வி. தினகரனை மீண்டும் சேர்க்க வேண்டும் என தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாகக் கோரிக்கை…

7 minutes ago

குஷியோ குஷி தமிழகம் முழுவதும் அடுத்த 3 மாதங்களில்… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!

தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், அடுத்த 3 மாதங்களுக்குள் புதிதாக 2,000 மின்சார ஏசி பஸ்களை…

13 minutes ago

4 மாசமா யாருக்குமே தெரியல… பர்தாவுக்குள் ஒளிந்திருந்த பகீர் உண்மை… 50 சவரன் நகையை நைசாக சுருட்டிய ‘நவநாகரீக’ பெண்… சென்னையில் அடுத்தடுத்து நடந்த அதிரடி கைதுகள்…!

சென்னை வியாசர்பாடியில் உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த நான்கு மாதங்களாக வாடிக்கையாளர் போல பர்தா அணிந்து வந்து, ஊழியர்களின்…

22 minutes ago