இனி பத்திரப்பதிவு செய்ய 1 பைசா கூட லஞ்சம் தர வேண்டாம்?… சார்-பதிவாளர் ஆபீஸில் இது கட்டாயம்… தமிழக அரசின் அதிரடி உத்தரவு..!

Spread the love

சொந்தமாக ஒரு வீடு அல்லது நிலம் வாங்க வேண்டும் என்பது சராசரி மனிதனின் வாழ்நாள் கனவு. ஆனால், பாடுபட்டுச் சேர்த்த பணத்தில் பத்திரப்பதிவு செய்யச் செல்லும்போது, சார்-பதிவாளர் அலுவலகங்களில் ஆவண எழுத்தர்கள் மற்றும் புரோக்கர்கள் மூலமாக மறைமுகமாக லஞ்சம் கேட்கப்படுவதாகப் புகார்கள் நீண்டகாலமாகவே இருந்து வருகின்றன. இந்த நிலையை முற்றிலும் மாற்றியமைக்கத் தமிழக அரசு தற்போது பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பொதுமக்களிடம் அதிகாரிகள் கனிவாக நடந்து கொள்ள வேண்டும், அவர்களை உட்கார வைத்துப் பேச வேண்டும் என்பது போன்ற முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் யாருக்கும் ஒரு பைசா கூட லஞ்சம் கொடுக்காமல் தங்களது பத்திரப்பதிவை எப்படிச் செய்வது என்பது குறித்த புதிய விழிப்புணர்வு பிரச்சாரத்தைப் பதிவுத்துறை அலுவலர்கள் சங்கமே நேரடியாகத் தொடங்கி, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த காலங்களில் சார்-பதிவாளர்கள் தங்களுக்கு வேண்டிய இடங்களுக்கு மாறுதல் (டிரான்ஸ்பர்) பெறப் பெரும் தொகையை லஞ்சமாகக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்து வந்தது. ஆனால், தற்போதைய புதிய நடைமுறையால், சமீபத்தில் 132 சார்-பதிவாளர்களுக்கு எந்தவிதமான பண பரிமாற்றமும் இல்லாமல், முற்றிலும் நேர்மையான முறையில் இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இதனால், அலுவலர்களும் பணியாளர்களும் மக்களிடம் எந்தக் காரணத்தைக் கொண்டும் லஞ்சம் கேட்டு வற்புறுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, பொதுமக்கள் தங்களின் பத்திரப்பதிவைச் சுமுகமாக முடிக்க, “பணம் கொடுத்தால்தான் வேலை நடக்கும்” என்ற தப்பான எண்ணத்தைக் கைவிட வேண்டும் என்றும், ஆன்லைனில் டோக்கன் வாங்கி, தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்திற்குத் தாமதமில்லாமல் செல்ல வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பதிவுத்துறையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்டார் 3.0 (STAR 3.0) சாப்ட்வேர் தொழில்நுட்ப வழிமுறைகளை மக்கள் முறையாகப் பயன்படுத்தப் பழக வேண்டும் என்றும், தேவையில்லாமல் அவசரப்படுத்துவதைத் தவிர்த்து, ஊழியர்களுக்குக் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் சங்க நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த மாற்றங்கள் குறித்து தேசிய ரியல் எஸ்டேட் வளர்ச்சி கவுன்சில் தரப்பில் கூறும்போது, அரசின் இந்த அதிரடி உத்தரவுகளால் தற்போது பணம் கேட்டு மக்களை வற்புறுத்துவது கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நடுத்தர மக்கள் அபார்ட்மெண்ட் வீடு வாங்கும்போது லஞ்சம் தவிர்க்கப்பட்டால், ஒரு பத்திரத்திற்கு மட்டுமே குறைந்தபட்சம் ₹30,000 வரை மிச்சமாகும் என்பதால், இந்த லஞ்சமில்லா சூழல் தொடர்ந்து நீடிப்பதை அரசு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Nanthini

Recent Posts

“உன் கழுத்தை அறுத்துடுவேன்டா”…பள்ளி சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை… சிக்கிய 3 காமுகர்கள்… நீதிமன்ற வளாகத்தில் ஆவேசமடைந்த தந்தை… கதிகலங்கி நின்ற போக்சோ கைதி…!

விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு எதிராக அரங்கேறிய அடுத்தடுத்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக, கடந்த சனிக்கிழமை (ஜூலை 04) ஒரே நாளில்…

18 minutes ago

இன்று நேரில் ஆஜராகாத செந்தில் பாலாஜி…. அடுத்த 24 மணி நேரத்தில் அதிரடியாக பாய்கிறதா கைது நடவடிக்கை?…. பரபரக்கும் தமிழக அரசியல்….!

தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும்…

26 minutes ago

திடீர் திருப்பம்… அமித் ஷாவுக்கு துணைப் பிரதமர் பதவி?… அதிரப் போகும் டெல்லி…. யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்..!

மத்திய அமைச்சரவையில் விரைவில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவல் பெரும் பரபரப்பை…

30 minutes ago

சுடுதண்ணீர், பழுக்கக் காய்ச்சிய கரண்டி… “ரயில்வே தண்டவாளத்தில் போ விழுந்து செத்துடு”… ஈரோட்டில் பெத்த மகளுக்கே நடந்த கொடூரம்… நள்ளிரவில் அம்பலமான பயங்கரம்…!

ஈரோடு மாவட்டம், வெண்டிபாளையம் சீனிவாசராவ் வீதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு, முதல் மனைவி குமுதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக…

40 minutes ago

“இது தொல்லை தாங்க முடியல.. அழுத குழந்தையை சுவற்றில் வீசிய காதலன்”… அடுத்த நொடியே தாய் செய்த கொடூர செயல்… இறுதிச் சடங்கில் அம்பலமான பகீர் உண்மை.!

மயிலாடுதுறை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மூன்று வயது ஆண் குழந்தையைத் தாயும் அவரது கள்ளக்காதலனும் அடித்துக் கொலை செய்துவிட்டு,…

47 minutes ago