மத்திய அமைச்சரவையில் விரைவில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தற்போது நாட்டின் உள்துறை அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் அமித்ஷா, புதிய மாற்றங்களின்படி துணைப் பிரதமராக நியமிக்கப்படலாம் எனப் பலத்த பேச்சுகள் அடிபடுகின்றன.
இதற்கு முன்னதாக, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 2002 முதல் 2004 ஆம் ஆண்டு வரை எல்.கே. அத்வானி துணைப் பிரதமராகப் பதவி வகித்தது இங்கு குறிப்பிடத்தக்கது. அமித்ஷாவின் இந்தச் சாத்தியமான பதவி உயர்வு ஒருபுறமிருக்க, மகாராஷ்டிராவில் கூட்டணியில் இருக்கும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணிக்கு இந்த அமைச்சரவை மாற்றத்தில் கூடுதல் பிரதிநிதித்துவம் மற்றும் முக்கியத் துறைகள் வழங்கப்படலாம் என்றும் தற்போதைய டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில், பெற்றோர் இல்லாத ஏழை தலித் பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை…
கோவை மேற்கு புறவழிச்சாலைக்கு உட்பட்ட மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி, சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்…
தஞ்சாவூர் அருகே ஆர். சுத்திப்பட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில், திடீரென நெல்…
அதிமுகவில் டி.டி.வி. தினகரனை மீண்டும் சேர்க்க வேண்டும் என தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாகக் கோரிக்கை…
தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், அடுத்த 3 மாதங்களுக்குள் புதிதாக 2,000 மின்சார ஏசி பஸ்களை…
சென்னை வியாசர்பாடியில் உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த நான்கு மாதங்களாக வாடிக்கையாளர் போல பர்தா அணிந்து வந்து, ஊழியர்களின்…