சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தம்பிபட்டி கிராமத்தைச் சேர்ந்த 40 வயதுடைய வடிவேல் என்பவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். கடந்த ஜூன் மாதம், இவருடைய செல்போன் எண்ணிற்கு ‘கவிதா’ என்ற பெயரில் ஒரு பெண்ணிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாக அந்தப் பெண் கூறியதை அடுத்து, வடிவேலும் மனிதாபிமான அடிப்படையில் கூகுள் பே (G-Pay) மூலமாக ரூ.4,500 அனுப்பியுள்ளார். இந்த பணப் பரிவர்த்தனைக்குப் பிறகு, இருவருக்குள்ளும் செல்போன் வழியே தொடர் பேச்சுவார்த்தை ஏற்பட்டு, நாளடைவில் அது நெருக்கமான பழக்கமாக மாறியுள்ளது.
ஒரு கட்டத்தில், இவர்களது பழக்கத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்தப் பெண், வடிவேலுக்கு ஆசை வலை வீசியுள்ளார். காரைக்குடிக்கு வந்தால் நாம் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருக்கலாம் என அவர் கூறிய ஆசை வார்த்தைகளை வடிவேலும் நிஜமென நம்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 24-ஆம் தேதி அந்தப் பெண்ணைச் சந்திப்பதற்காக வடிவேல் காரைக்குடிக்குச் சென்றுள்ளார். அங்கு வந்த வடிவேலை, “நாம் கொஞ்சம் தனிமையாகப் பேசலாம்” என்று கூறி, அங்கிருந்த ஒரு பழைய ஓட்டு வீட்டிற்குள் கவிதா அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு சென்ற வடிவேலுக்குப் பேரிடியாக ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவர்கள் வீட்டிற்குள் நுழைந்த உடனே, அங்கு ஏற்கனவே பதுங்கியிருந்த மர்ம நபர்கள் சிலர் திடீரென வெளியே வந்து வடிவேலைச் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் வடிவேலை வலுக்கட்டாயமாக நிர்வாணமாக்கி, சரமாரியாகத் தாக்கியதுடன், இந்த விவகாரத்தை வெளியில் சொல்லிவிடுவோம் என மிரட்டி ரூ.50 லட்சம் பணம் கேட்டுப் பறிக்க முயன்றுள்ளனர். ஆனால், தன்னிடம் அவ்வளவு பெரிய தொகை இல்லை என்று வடிவேல் கெஞ்சியதால், அவரிடமிருந்த ஹோண்டா இருசக்கர வாகனம் மற்றும் செல்போனைப் பறித்துக்கொண்டு அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது.
இந்தக் கொடூரச் சம்பவத்தால் நிலைகுலைந்த வடிவேல், எப்படியோ தப்பித்து வீடு திரும்பியதும் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், காரைக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர். இந்த விசாரணையின் முடிவில், ‘ஹனி டிராப்’ என்ற பெயரில் திட்டமிட்டு ஆசை வலை வீசிய கவிதா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், இந்தச் சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மற்ற மூன்று பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சென்னை வியாசர்பாடியில் உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த நான்கு மாதங்களாக வாடிக்கையாளர் போல பர்தா அணிந்து வந்து, ஊழியர்களின்…
தமிழக அரசியல் வரலாற்றில் நீண்ட காலமாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி…
ஈரோடு மாவட்டம், சக்தி சாலை செங்குந்தர் நகர் 6-வது வீதியைச் சேர்ந்த 50 வயதுடைய கண்ணன் என்பவர், அங்குள்ள காலண்டர்…
ஹரியானா மாநிலம் குர்கானைச் சேர்ந்த 21 வயது இளைஞரான மோனு, கடந்த ஜூன் 8-ஆம் தேதி இரவு மருந்து வாங்குவதற்காக…
விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு எதிராக அரங்கேறிய அடுத்தடுத்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக, கடந்த சனிக்கிழமை (ஜூலை 04) ஒரே நாளில்…
தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும்…