Connect with us
Samsung

TECH

உலகையே கட்டி ஆளும் டிஜிட்டல் அரசன் சாம்சங் : மீன் விற்பனையில் ஆரம்பித்த வெற்றிச் சரித்திரம்

இன்று உலகையே நம் ஒவ்வொருவரின் உள்ளங்கைகளிலும் அடக்கி வைத்து எலக்ட்ரானிக் துறையின் ஜாம்பவானாகத் திகழும் சாம்சங் நிறுவனம் ஆரம்பத்தில் அவர்கள் ஆரம்பித்த தொழில் எது தெரியுமா?

சரியாக இரண்டாம் உலகப் போர் உச்சத்திலிருந்த காலகட்டம். தென்கொரியாவை ஜப்பான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

   

அச்சமயம் 1938-ல் லீ பியுங்-சுல் என்பவரால் சாம்சங் என்று ஒரு வர்த்தக நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டது. வெறும் 40 பேர் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட சாம்சங் முதலில் மீன் மளிகை பொருட்கள் விற்பனை மட்டும்தான் செய்தது.

அடுத்த 30 வருடங்களில், உணவு பதப்படுத்துதல், ஜவுளி, இன்சூரன்ஸ், பத்திரங்கள் மற்றும் சில்லறை வணிகம் உள்ளிட்ட துறைகளில் நுழைந்து தனது ராஜ்ஜியத்தை விரிவாக்கம் செய்தது சாம்சங். 1960களின் பிற்பகுதியில் மின்னணுவியல் துறையில் நுழைந்தது தான் பிரம்மாண்ட வளர்ச்சிக்கு அடிகோலியது. மேலும் சிறிய சிப் முதல் கப்பல் கட்டும் தொழில் வரை பிரம்மாண்ட தொழில் நிறுவனமாக உலகெங்கும் உருவெடுத்தது.

1987 இல் லீயின் மரணத்தைத் தொடர்ந்து, Samsung குழுமம், Shinsegae குழுமம், CJ குழுமம் மற்றும் Hansol Group, மற்றும் Joongang Group ஆகிய ஐந்து வணிகக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டது . குறிப்பாக எலக்ட்ரானிக் துறையில், சாம்சங் நுழைந்தது ஒரு பெரிய திருப்பம் எனலாம். வெறும் மீன் பொருள் வியாபார நிறுவனமாக ஆரம்பித்த அந்த கம்பெனி, 1970களில் கம்ப்யூட்டர்களை தயாரித்து, ஒரு எலக்ட்ரானிக் தயாரிப்பு நிறுவனமாக தன்னை மாற்றிக்கொண்டது.

1984-ல் எழுத்தப்பட்ட புத்தகம் நிகழ்ச்சியாக உருவானது எப்படி..? BIGG BOSS பற்றி பலரும் அறிந்திடாத சுவாரசியமான தகவல்..

தனது பொருட்கள் தயாரிப்புகாகவும், எலக்ட்ரானிக்ஸ் துறையில் ஒரு முன்னோடியாக மாறவும், பெரும் டாலர்களை முதலீடு செய்து, பல திறமையான பொறியியல் வல்லுநர்களைக் கொண்டு சாம்சங் கம்ப்யூட்டர் செய்ய ஆரம்பித்த கம்பெனி இன்று, சாம்சங் மொபைல் போன் டேப்லெட் கேலக்ஸி என்று உலக டிஜிட்டல் வர்த்தகத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது! 40 பேர் கொண்ட ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம், இன்று 4 மில்லியன் மக்கள் கொண்ட நிறுவனமாக மாறி உள்ளது!

மேலும் சாம்சங் டிஜிட்டல் சிட்டி என்ற தென்கொரியாவின் தலைநகரில் உருவாக்கப்படும் ஒரு டிஜிட்டல் நகரமே, சாம்சங் நிறுவனத்திற்கு சொந்தம்! இந்த நகருக்குள் நாம் நுழைந்தால் அடுத்த நூற்றாண்டுக்கே சென்று விடும் அளவிற்கு டெக்னாலஜியில் உச்சம் தொட்டிருக்கிறது சாம்சங்!

இன்று உலகின் மிகப்பெரிய நிறுவனமாக விளங்கும் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் மட்டுமல்லாமல், கப்பல் கட்டுவது, பிரம்மாண்ட டவர்கள் கட்டுவது, ராணுவ தளவாடங்கள் தயாரிப்பது என இவர்கள் கைவைக்காதே தொழிலே இல்லை எனலாம். இந்தியாவிற்கு ஒரு டாடா போல் தென்கொரியாவிற்கு சாம்சங் நிறுவனமே அடையாளம்.

Continue Reading

More in TECH

To Top