Connect with us

CINEMA

1984-ல் எழுத்தப்பட்ட புத்தகம் நிகழ்ச்சியாக உருவானது எப்படி..? BIGG BOSS பற்றி பலரும் அறிந்திடாத சுவாரசியமான தகவல்..

பிக்பாஸ் நிகழ்ச்சி. இன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்சிகளில் மிக முக்கிய ரியாலிட்டி ஷோவாக பார்க்கப்படுவது பிக்பாஸ் நிகழ்ச்சி. சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்கள், பிரபலமாக்க நினப்பவர்கள் என ஒரு கலவையாக சிலரை வெளி உலகம் தெரியாதவாறு, ஒரே வீட்டிற்குள் அடைத்து வைத்து, அவர்களுக்குள் பல போட்டிகள் வைத்து, வாரா வாராம் சரியாக விளையாடாதவர்களை வெளியே அனுப்பி, இறுதியில் ஒருவரை வெற்றியாளராக தேர்ந்தெடுப்பர்.

#image_title

   

ஹிந்தியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி பிறகு தெலுங்கு, தமிழ் என பிற மொழிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழில் 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். தமிழில் மிகப்பெரிய ஹிட்டான இந்நிகழ்ச்சி, தொடர்ந்து 7 வது சீசனாக தற்போதும் நடந்து வருகிறது. இன்னும் சில தினங்களில் 7-வது சீசன் நிறைவடையவுள்ளது. இந்நிகழ்ச்சி பலரால் விரும்பி பார்க்கப்பட்டாலும், பல கலாச்சார சீரழிவு நடைபெறுவதாக சில எதிர்ப்புகளும் எழுந்து வருகிறது.

#image_title

குறிப்பாக ஆபாச ஆடைகளை பெண்கள் அணிவதாகவும், ஆண்கள், பெண்கள் என கலந்து வீட்டினுள் லூட்டி அடிப்பதாகவும், இதனை பார்க்கும் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும் பலரும் இந்த நிகழ்ச்சிக்கு எதிராக புகார்களையும் கொடுத்தனர். கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என பலரும் அவர் மீதும் புகார்களை கொடுத்தனர். ஆயினும் வெற்றிகரமாக 7வது சீசன் முடியவிருக்கிறது. இந்த நிலையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் எங்கு எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

#image_title

அதாவது 1999-ம் ஆண்டு நெதர்லாந்து நாட்டில் பிக் பிரதர் (BIG BROTHER)என்ற பெயரில் தொடங்கியது. இப்போட்டியை தொடங்குவதற்கான காரணம், ஜார்ச் ஆர்வல் என்பவர் எழுதிய 1984 என்கிற நாவல் தான். சர்வாதிகார ஆட்சியில் நடக்கும் ஒரு நாட்டில் வசிக்கும் மக்களை 24 மணி நேரமும் கண்காணிக்கும் ஒரு ஆளுமை சக்தியான பிக் பிரதர், சொல்வதை தான் அனைவரும் கேட்க வேண்டும் என்ற சட்டம் இருந்தது. அதற்கேற்றார் போல் தான் மக்களும் நடந்து கொள்ள வேண்டும் என அந்த நாவலில் கூறப்பட்டிருந்தது.

#image_title

அதையே தான் 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்சியிலும் நடைமுறைப்படுத்தி இருந்தனர். பங்கேற்பாளர்களை 24 மணி நேரமும் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள். அது தான் பிக் பிரதர். அது கூறும் விதிமுறைகளின் படியே பங்கேற்பாளர்கள் விளையாட வேண்டும். அந்தப் புத்தகத்தில் எப்படி அனைவரையும் அடைத்து வைத்திருந்தார்கள் என கூறப்பட்டிருந்ததோ, அதேப் போல, இந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்பாளர்களை வெளி உலக தொடர்பு இன்றி குறிப்பிட்ட நாட்களுக்கு அடைத்து வைத்து, பல போட்டிகளை கொடுப்பார் பிக் பிரதர். அந்த தனிமையின் மூலம் அவர்களுக்குள் ஏற்படும், பாசம், கோபம், அழுகை, சண்டை என அனைத்தையும் படம் பிடித்து அதனை மக்களுக்கு நேரடியாக வழங்கியதால், அந்த நிகழ்ச்சி பெரும் வெற்றி பெற்றது.

#image_title

author avatar
Archana
Continue Reading

More in CINEMA

To Top