Connect with us

NEWS

ரோட்டுக்கடை மூலம் தினமும் 30 ஆயிரம் சம்பாதிக்கும் குமாரி ஆன்ட்டி.. கடைக்கு வந்த பிரச்னையால் நேரடியாக களத்தில் இறங்கிய முதலமைச்சர்..

தெலுங்கானா மாநிலமே இப்போது இவரைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறது. சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இவர் பிரபலமோ, அரசியல் வாதியோ, விளையாட்டு வீரரோ, சாதனை புரிந்தவரோ இல்லை. தனது கை மந்திரத்தை வைத்து விதவிதமான உணவுகளைச் சமைத்து ஹைதராபாத் நகர பிளாட்பார்ம்-ல் ஹோட்டல் நடத்தி வரும் குமாரி ஆண்ட்டிதான். இன்று ஒட்டுமொத்த தெலுங்கானா மாநிலமே இவரைப் பற்றி பேச என்ன காரணம்?

தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்தான் சாய் குமாரி. ஹைதராபாத் நகரின் மாதப்பூர் பகுதியில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்ஸ்ட்டாகிராம் ரீல்ஸ்-க்காக ஒருவர் இவரது உணவகத்தை வீடியோவாக எடுத்துப் பதிவிட வைரல் ஆனால் இந்த சாய் குமாரி.

   

நான்கு சூப்பர் ஸ்டார்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்த ஒரே நடிகை.. ரஜினியுடன் அதிக படங்களில் நடித்த ஹீரோயின்

தனது உணவகத்தில் சிக்கன் வறுவல், சில்லி சிக்கன், குடல் கறி, மீன்குழம்பு, மீன் ப்ரை என நாக்குச் சொட்ட வைக்கும் அசைவ உணவுகளைத் தயார் செய்து விற்க இவரது கடை பிரபலம் ஆனது. தொடர்ந்து இவர் கடையை நோக்கி யூடியூப் சேனல்கள் படையெடுத்து ரிவியூ போட அவர்களுக்கும் ஏராளமான பார்வைகள் கிடைத்தது.

Kumari aunty

#image_title

ஒரேநாளில் ஓஹோவென புகழ்பெற்ற சாய்குமாரியின் உணவகத்தை குமாரி ஆண்ட்டி என்று அழைக்கத் தொடங்கினர். இந்த உணவகம் பற்றிக் கேள்விப்பட்ட பல முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள் என பலரும் இங்கு வந்து உணவருந்த குமாரி ஆன்ட்டி உணவகம் தெலுங்கானா முழுவதும் பரவியது.

தினமும் மதியம் மட்டுமே உணவு சமைத்து எடுத்து வரும் இந்த ஹோட்டலில் சாப்பிட தினமும் ஏராளமானோர் வருகை தருவதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட ஆரம்பித்தது. மேலும் இவருக்கும் லாபம் அதிகரிக்க தினசரி 40 ஆயிரம் வரை சம்பாதிக்க ஆரம்பித்தார். மேலும் புதிதாக பணியாட்களையும் நியமித்தார்.

Kumari aunty

#image_title

போக்குவரத்து நெரிசலால் செய்வதறியாது திகைத்த போலீசார் இவரது கடையை மூடச்சொல்லி உத்தரவு போட்டனர்.  ஒரே ஒரு வீடியோவால் வந்த வினையா என்று குமாரி ஆன்ட்டி புலம்பித் தள்ள அவரது கஸ்டமர்களுடன் ரோட்டில் இறங்கினார். மேலும் இவருக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுக்க இப்பிரச்சினையை மாநில அரசு கையில் எடுத்தது.

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியே இதைக் கையில் எடுத்து போக்குவரத்து டிஜிபியிடம் இவர் மீது எந்த வழக்கும் பதிய வேண்டாம். மேலும் கடையையும் மூட வேண்டாம் என அறிவுறுத்தியிருக்கிறார். இதனால் குமாரி ஆண்ட்டி தற்போது மகிழ்ச்சி அடைந்து ரேவந்த் ரெட்டி வாழ்க என கோஷமிட்டு வருகிறார். திறமை இருந்தால் வெற்றி தேடி வரும் என்பதற்கு குமாரி ஆன்ட்டியின் வெற்றிக் கதையும் ஓர் நல்ல உதாரணம்.

author avatar
Continue Reading

More in NEWS

To Top