17,000 கோடியிலிருந்து பூஜ்யத்திற்கு வந்த இந்திய பணக்காரர்..? யார் இந்த பைஜூ ரவீந்திரன்

By Deepika

Updated on:

2011 ஆம் ஆண்டு ரவீந்திரன் என்பவரால் பைஜூஸ் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. தொடக்கப்பள்ளி மாணவர்களில் இருந்து MBA பட்டம் பெற விரும்பும் மாணவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு கல்வி சேவைகளை தனது டிஜிட்டல் தளத்தின் வாயிலாக உருவாக்கி அளித்து வருகிறது. பைஜூஸ் நிறுவனம் மிகப்பெரிய நிறுவனமாக உயர்ந்தது. கிட்டத்தட்ட 11 ஆண்டுகளில் அதாவது 2022 ஆம் ஆண்டு இதன் மதிப்பு 22 மில்லியன் டாலர் அளவை எட்டியது.

Byjus ravindran family

அப்படிப்பட்ட பைஜூஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ரவீந்திரன் 17,000 கோடி சொத்துமதிப்பில் இருந்து 0 விற்கு வந்துள்ளார் என்றால் நம்ப முடிகிறது. ஆம், இது நடந்துள்ளது. 2022 மார்ச் மாதம் முடிந்த நிதியாண்டிற்கான கணக்குகளைத் தாமதமாக வெளியிட்டபோது வெளிச்சத்திற்கு வந்தன. அந்த அறிக்கையில், 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேற்பட்ட நிகர இழப்பு ஏற்பட்டதாகத் தெரியவந்தது.

   
BYJUS ravindran networth has fallen

இதனால், இதன் முதலீட்டாளர்களின் ஒருவரான பிளாக்ராக் (BlackRock) நிறுவனம், பைஜூஸின் மதிப்பை 1 பில்லியன் அமெரிக்க டாலராகக் குறைத்துள்ளது. இது நிறுவனத்தின் உச்ச மதிப்பான 22 பில்லியன் டாலர் மதிப்பில் சிறு பகுதியே. இதன் பின்பு முதலீட்டாளர்களுடனான பிரச்சனை, வழக்கு, அவரச கூட்டம், ஊழியர்கள் பணிநீக்கம், ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க பைஜூ ரவிந்திரன் தனது சொத்துகள், வீட்டையும் அடமானம் வைத்த சம்பவம், பல கட்டங்களாக 2022 முதல் இன்று வரையில் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகிறது.

Anil ambani

இதே நிலை உலகின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷின் அம்பானியின் சகோதரர் அணில் அம்பானிக்கு 2020 ஆம் ஆண்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

author avatar
Deepika