கோமாவில் பலர் வீழ்வது உண்டு, கோமாவில் பல வருடங்கள் இருந்தும் இறப்போர் உண்டு. ஆனால் ஒரு பெண் கோமாவில் இருக்கும்போது கடவுளை பார்த்துள்ளார், கோமாவில் இருந்து மீண்டு அந்த பெண் அதை உலகத்துடன் பகிர்ந்துள்ளார்.

Penny wittbrodt
அமெரிக்காவை சேர்ந்தவர் பென்னி விட்ப்ரோட். 52 வயதாகும் இவர் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கும்போது திடீரென மூச்சு திணறல் பிரச்சனையை சந்தித்துள்ளார். இவரது மகன் இவரை விரைந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளான். மருத்துவமனைக்கு சென்ற பின் இவர் கோமாவுக்கு சென்றுவிட்டார். ஆனால் சில மணி நேரங்களில் கோமாவில் இருந்து மீண்ட இவரை பார்த்து அனைவரும் ஆச்சர்யப்பட்டுள்ளனர்.
ஆனால் அதன்பின் நடந்தது தான் அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. தன்னுடைய மகனிடம் தான் கடவுளை சந்தித்து விட்டு வந்ததாக தெரிவித்துள்ளார். அவ்வளவுதான் இந்த் விஷயம் காட்டுத்தீ போல் பரவி அங்கிருந்த னைவருக்கும் தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்ல ஒட்டுமொத்த பத்திரிக்கையும் பென்னியை நோக்கி படையெடுத்து விட்டனர்.

Retired nurse penny claims that she met god
இதுகுறித்து பென்னி கூறும்போது, கண்ணை பறிக்கும் ஒரு மிகப்பெரிய ஒளியை நான் பார்த்தேன், என்னுடைய பாட்டியின் குரல் எனக்கு கேட்டது. பயப்படாமல் வா என்று என்னை அழைத்தார். நான் அங்கு மஞ்சள் நிற பூக்கள் நிறைந்த தோட்டத்தை பார்த்தேன். ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு விதமாக இருந்தது, தனி தனியான சுவை, மனம் இருந்தது. அதன் அருகில் செல்லாமலே இதை என்னால் உணர முடிந்தது.
அங்கு கடவுள் இருந்தார், என் வாழ்க்கையை ஏன் இவ்வளவு கஷ்டப்படுத்துகிறாய் என கேட்டேன், இது எல்லாம் கர்மா அதனால் தான் இதெல்லாம் நடந்தது என கூறினார். கண்விழித்த போது நான் இங்கு இருக்கிறேன் என்றார். அவர் கோமாவில் இருந்து மீண்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இதைக்கேட்ட பென்னி அதிர்ச்சியடைந்து உள்ளார். தான் கடவுளை பார்த்ததையும், இந்த் பிறவியின் அர்த்தத்தை புரிந்து கொண்டதாகவும் கூறியுள்ளார் பென்னி.