டெல்லி அணியை தெறிக்க விட்ட நடராஜன்.. பல லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலி பரிசு.. எத்தனை பவுன் தெரியுமா?..

By Mahalakshmi

Published on:

டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய காரணத்தினால் 80 பவுன் தங்கச் சங்கிலியை யாக்கர் கிங் நடராஜன் கைப்பற்றினார். நேற்று டெல்லி கேப்பிடல் மற்றும் சன்ரைசர்ஸ் இடையேயான 35 ஆவது போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

   

இதனால் முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி ஆறு ஓவர்களிலேயே 125 ரன்கள் குறித்து வரலாற்று சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து ஆட்ட முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 266 ரன்களை குவித்து அசத்தியது. இவை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி கேப்பிடல் அணி அதிரடியாக ரன்களை குவிக்க தொடங்கியது. இருப்பினும் சன்ரைசர்ஸ் அடித்த ரன்களை எடுக்க முடியாமல் திணரியது.

இந்த போட்டியில் யாக்கர் கிங் நடராஜன் 19 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக விளையாடி இருந்தார். இவரின் சிறப்பான ஆட்டத்தை பாராட்டும் விதமாக 80 பவுன் தங்கச் சங்கிலி பரிசாக வழங்கப்பட்டது. ஒவ்வொரு முறை போட்டியில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு சுழற்சி முறையில் தங்கச் சங்கிலி வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த முறை தங்கச்சங்கிலியை தமிழ்நாட்டு வீரரான நடராஜன் தட்டிச் சென்றுள்ளார்.

author avatar
Mahalakshmi