நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே போகிறது, அதன் தேவையும் நம் வாழ்க்கையை எளிதாக்குகிறது. ஆனால் இதனால் நமக்கு தீங்கும் அதிகம் தான். குறிப்பாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஹெட்போன்ஸ், எமன் உருவத்தில் ஹெட்போன்ஸ் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா ? ஆனால் அதுதான் உண்மை.

Teenage boy listening to headphones
உலக சுகாதார அமைப்பு இதுகுறித்து கூறியுள்ளது. அதாவது 100 கோடி மக்கள் இந்த ஹெட்போன்ஸ் பயன்படுத்தில் தங்கள் செவி திறனை குறைத்து கொள்கிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது. பார், கிளப், ம்யூசிக் கான்செர்ட் போன்ற இடங்களில் வைக்கப்படும் ஸ்பீக்கர்களால் பாதிப்பு என்றால், நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஹெட்போன்ஸ் இன்னும் அதிக பாதிப்பை நமக்கு தருகிறது.

Teenage girl listening to headphones
இதில் 50 சதவீதம் பேர் 35 வயதிற்கு குறைவானவர்கள். தொடர்சியாக ஹெட்போன்ஸ் நாம் பயன்படுத்தி வந்தால், நிரந்தரமாக நாம் கேட்கும் திறனை இழப்பதற்கு கூட வாய்ப்பு அதிகம் உள்ளது. ஏர்ட்ரம் வழியாக இந்த சத்தம் நம் கேட்கும் எலும்புகளுக்கு செல்கிறது, இதன் வழியாக அதிக சத்தம் உள்ளே நுழையும் போது நம் செவித்திறன் பாதிக்கப்படும். இதில் கஷ்டம் என்னவென்றால் நம் காதுகளில் உள்ள செல்கள் பாதிக்கப்பட்டால் அதை சரி செய்ய முடியாது. அதனால் அதிகம் ஹெட்போன்ஸ் பயன்படுத்தும் நபர்கள், அதை பயன்படுத்துவதை குறைக்க வேண்டும்.