கமல் மகளுடன் பிரேக்கப்.. முதன் முறையாக மௌனத்தை கலைத்து மனம் திறந்த ஸ்ருதிஹாசனின் காதலர்..!

By Mahalakshmi on ஏப்ரல் 29, 2024

Spread the love

தமிழ், தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். உலகநாயகன் கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தனது தந்தையை போலவே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு லக் என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இருப்பினும் இவருக்கு ஏழாம் அறிவு திரைப்படம் தான் ஒரு நல்ல வரவேற்பை கொடுத்தது.

   

அதைத் தொடர்ந்து தமிழில் 3, பூஜை, சிங்கம் 3, லாபம், வேதாளம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். கடந்த ஆண்டு நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் படத்திலும் சுருதிஹாசன் நடித்திருந்தார். தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் இவர் தனுசுடன் 3 திரைப்படத்தில் நடிக்கும் போது சில கிசு கிசுக்கள் வந்தது. அதைத்தொடர்ந்து தெலுங்கில் சித்தார்த் உடன் நடித்து வந்த போது இருவரும் காதலிப்பதாக கூறிவந்த நிலையில் பின்னர் பிரேக்கப் செய்து கொண்டனர்.

   

 

கடந்த 3 வருடங்களுக்கு முன்பு லண்டனை சேர்ந்த மைக்கில் என்பவரை காதலித்து வந்தார். பின்னர் அதுவும் பிரேக்கப் ஆனது.  ஒரு வருடத்திலேயே மும்பையை சேர்ந்த டூடுல் கலைஞர் ஆன சாந்தனு ஆசாரிக்காவை காதலித்தார். மூன்று வருடங்களுக்கு மேலாக இருவரும் காதலித்து வந்த நிலையில் ஒரே வீட்டில் தான் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் கூட அடிக்கடி வெளியாகி வைரலானது.

ஆனால் சமீப காலமாக இவர்கள் இருவரையும் ஒன்றாக பார்க்க முடியவில்லை. சாந்தனுவை விட்டு ஸ்ருதிஹாசன் பிரிந்து விட்டதாக பாலிவுட் ஊடகங்களில் தொடர்ந்து தகவல் வெளியாகி வந்தது. அது மட்டுமில்லாமல் ஸ்ருதிஹாசன் தனது instagram கணக்கில் இருந்து சாந்தனுடன் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கி இருக்கிறார். இதைப் பார்த்த பலரும் பிரேக்கப் செய்துவிட்டார் என்று கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் ஸ்ருதிஹாசனின் காதலரான சாந்தனு சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் பல ஊடகங்கள் நான் ஸ்ருதியின் கணவன் என்று கூறி வருகிறார்கள். நாங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனக்கு திருமணம் ஆகவில்லை. ஒவ்வொரு விஷயத்தையும் வெளிப்படையாக கூறும் ஒருவர் இதை ஏன் மறைக்க வேண்டும். எனவே என்னை பற்றி அறியாதவர்கள் தயவு செய்து அமைதியாக இருங்கள் என்று கூறி இருக்கிறார்.