பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான ஜிவி பிரகாஷ் தனது மனைவியே சைந்தவியை விவாகரத்து செய்தது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆள் ஆளுக்கு ஒரு பக்கம் இதுதான் காரணம் என்று பேசி வரும் நிலையில் நேற்று பிரகாஷ்ராஜ் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதை தொடர்ந்து தற்போது சைந்தவி தேவையற்ற கருத்துக்களை பதிவிட்டு வரும் நபர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்திருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் வெயில் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ். தனது முதல் படத்திலேயே தன்னை நிரூபித்த இவர் அடுத்தடுத்து ஏராளமான திரைப்படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருகிறார்.
இசையை தாண்டி தற்போது நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக வளம் வரும் இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு பாடகி சைய்ந்தவியை பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து பல ஆண்டுகள் கழித்து இந்த தம்பதிகளுக்கு அன்வி என்கின்ற மகள் பிறந்தார். 11 வருடம் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த இந்த தம்பதிகள் இரண்டு நாட்களுக்கு முன்பு தாங்கள் பிரிய போவதாக தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் அறிவித்திருந்தார்கள்.
இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதை பார்த்த பலரும் பல காரணங்களை கூறி வந்தார்கள். இதைத் தொடர்ந்து ஜிவி பிரகாஷ் நேற்று தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் புரிதலும் போதுமான விவரமும் இல்லாமல் அனுமானத்தின் பெயரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்படுவது துரதிஷ்டவசமானது.
ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்து விமர்சனங்களை வைப்பது ஏற்புடையது கிடையாது. யாரோ ஒரு தனி நபரின் வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா..? இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததன் பின்னணியையும் காரணங்களையும் என்னுடைய நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் அறிவார்கள் என்று கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து தற்போது பாடகி சைய்ந்தவி ஒரு பதிவை வெளியிட்டு இருக்கின்றார். அதில் youtube பக்கங்களில் பலரும் பலவிதமான கதைகளை கூறி வருகிறார்கள். எங்களுக்கு பிரைவேசி வேண்டும் என்று கூறிய பிறகும் இதுபோன்று பேசி வருவது ஏற்புடையது அல்ல. எங்களுடைய விவாகரத்து யாரும் கட்டாயப்படுத்தி எடுக்கப்பட்ட முடிவு கிடையாது.
நாங்கள் இருவரும் ஒப்புக்கொண்டு தான் இந்த விவாகரத்தை செய்து இருக்கின்றோம். ஒருவரின் குணாதிசயத்தை படுகொலை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. அதுமட்டுமில்லாமல் ஜீவி பிரகாசும் நானும் கிட்டத்தட்ட 24 வருடம் பள்ளி படிக்கும் போதிலிருந்தே நண்பர்களாக இருந்தவர்கள். தற்போதும் அந்த நட்பை தொடர்ந்து வருகிறோம் என்று கூறியிருந்தார்.
View this post on Instagram