Connect with us

NEWS

காதலிக்காக கொடுத்த வாக்கை இன்றளவும் காப்பாற்றும் ரத்தன் டாட்டா.. உள்ளத்தால் கூட உயர்ந்துவிட்டார்..

இந்தியாவின் வளர்ச்சியில் தொழிலதிபர் ரத்தன் டாடாவின் பங்கு அளப்பறியது. இன்று இந்தியாவையே இயக்கி வரும் முன்னணி தொழிகளான ஆட்டோமொபைல், ஐடி, எலக்ட்ரானிக்ஸ், நிதி மேலாண்மை, விவசாயம், உணவு என அனைத்திலும் கால்பதித்து இந்தியாவையே தனது பரந்து விரிந்த தொழில் சாம்ராஜ்யத்தால் இயக்கி வருகிறார் ரத்தன் டாடா. இவரின் சொத்து மதிப்பைக் கேட்டால் எத்தனை பூஜ்ஜ்யம் போடுவது என்றே தெரியாது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

#image_title

   

ஆனாலும் தனது டாடா நிறுவனத்தின் லாபத்தில் பாதிக்கும் மேல் இந்தியாவை வளப்படுத்துவதிலும், நன்கொடைகள், கல்வி, மருத்துவம் போன்றவற்றிற்கும் செலவழித்து வருகிறார் ரத்தன் டாடா. தான் கொடுத்த வாக்கினை எப்படியாவது நிறைவேற்றுவதில் முனைப்புடன் செயல்படுபவர். அப்படி உருவானது தான் நானோ கார். ஆனால் தனது தனிப்பட்ட வாழ்விலும் ரத்தன் டாட்டா  கொடுத்த வாக்குறுதியை இன்றுவரை காப்பாற்றி வருகிறார்.

#image_title

அது என்னவென்றால் 86 வயதான அவர் திருமணமே முடிக்காததுதான். அவர் அமெரிக்காவில் இருந்த போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒரு பெண்ணை காதலித்தார். அப்போது அவர், தன் காதலியிடம் உன்னை தவிர வேறொரு பெண்ணை நான் திருமணம் செய்ய மாட்டேன் என்று உறுதியளித்தார்.

இளையராஜாவுக்கு வாய்ப்புக் கொடுத்த நாகூர் ஹனிபா..இசைஞானிக்கு இன்றும் தொடரும் இஸ்லாமிய பந்தம்

திடீரென் பாட்டிக்கு உடல்நிலை மிகவும் சரியில்லை என்று ரத்தன் டாட்டாவுக்கு அழைப்பு வர ரத்தன் டாட்டாவும் அவர் காதலித்த பெண்ணை தன்னுடன் இந்தியாவுக்கு வரச்சொல்லி அழைத்தார். அந்த சமயத்தில் – 1962ல் – இந்தியா-சீனா போர் நடந்ததன் காரணமாக, காதலியின் பெற்றோர் அனுமதி மறுத்தனர். பின் மீண்டும் அமெரிக்கா வந்த பிறகு அவளை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்துவிட்டு வந்து விட்டார். ஆனால் அவர் இந்தியா வந்த பிறகு சில நாட்களில் அவரது பாட்டி இறந்துவிட்டார்.

#image_title

ஆனால் அந்தப் பெண்ணோ தன் பெற்றோரின் விருப்பப்படி வேறொரு நபரை திருமணம் செய்து கொண்டார். இது ரத்தன் டாடாவுக்கு தெரியவந்தது. அப்போது அவர் ஒரு முடிவு செய்தார்; தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதாக வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதில்லை என்று தீர்மானம் செய்தார். ஒரு பேட்டியில் அவரே இந்த காரணத்தை கூறினார்.

அத்துடன், பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றொரு உண்மை என்னவென்றால், அவர் நமது நாட்டிற்காக உழைக்க விரும்பினார்; நாட்டை மேம்படுத்துவதில் தனது முழு நேரத்தையும் செலவிட விரும்பினார். எனவே, தனிப்பட்ட உறவுகளுக்கு அவர் பெரிதாக முக்கியத்துவம் தரவில்லை.

#image_title

ஒருமுறை நேர்காணல் செய்பவர் அவரை கேட்டார், “அந்த பெண் சென்ற பிறகும் நீங்கள் ஏன் உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தீர்கள் ? ” அதற்கு ரத்தன் டாட்டாவின் பதில் , “நீங்கள் உண்மையிலேயே ஒருவரை நேசித்தீர்கள் என்றால் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற தான் வேண்டும்” என்பது தான்.

Continue Reading

More in NEWS

To Top