Connect with us

CINEMA

இளையராஜாவுக்கு இப்படி தான் பட வாய்ப்பு கிடைத்ததா..! இசைஞானி ஆவதற்கு அஸ்திவாரம் அமைத்துக்கொடுத்த நாகூர் ஹனிபா..

இளையராஜாவிற்கும் இஸ்லாமிய மதத்திற்கும் அப்படி என்ன சம்பந்தமோ அவரது மகன் யுவன்சங்கர் ராஜா வரை தொடர்கிறது. இவரிடம் உதவியாளராக இருந்து பின் இசைப்புயலாக உருவெடுத்த ஏ.ஆர்.ரஹ்மானும் இந்துவாக இருந்து இஸ்லாம் மதத்தைத் தழுவி வருகிறார். யுவனோ இஸ்லாம் மத பெண்ணைத் தான் திருமணம் முடித்திருக்கிறார். இவை எல்லாவற்றையும் விட இளையராஜாவுக்கே இஸ்லாம் பாடகர் ஒருவர் வாய்ப்புக் கொடுத்த பின்னர் தான் வரிசையாக சினிமாவாய்ப்புகள் வந்து சேர்ந்தது. மேடைக் கச்சேரிகள் பலவற்றில் வாசித்து வந்த காலகட்டத்தில் பல இசை ஜாம்பவான்களிடம் சென்று வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்தார்.

#image_title

   

இந்த நிலையில் ஒரு நாள் பிரபல பாடகர் நாகூர் ஹனிபாவை இளையராஜா வாய்ப்பிற்காக சந்திக்க நேரிட்டது. அப்போது எம்.எல்.ஏ விடுதியில் தங்கியிருந்த நாகூர் ஹனிபாவிடம் இளையராஜா ‘‘நான் ஒரு இசையமைப்பாளர், அதற்காக வாய்ப்புகளைத் தேடி பல முயற்சிகளை எடுத்து வருகிறேன். அதன்படி நீங்கள் பாடும் ஒரு பாடல்களுக்கு நான் இசையமைக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டடார்.

காஜல், அனுஷ்கா, தமன்னாவைத் தொடர்ந்து அண்ணன்-தம்பிக்கு ஹீரோயினாகப் போகும் அதிதி ஷங்கர்

மேலும் இளையராஜா தான் யார் என்பதையும் அவருடைய இசைக் குழுவைப் பற்றியும் நாகூர் ஹனிபாவிடம் எடுத்துக் கூறினார். அதற்கு நாகூர் ஹனிபா, “என்னுடைய பாடல்களை எச்.எம்.வி நிறுவனம் தான் வெளியிட்டு வருகிறது. அதனால் நீங்கள் போய் அவர்களை பார்த்து பேசிக் கொள்ளுங்கள் என்று கூற, உடனே இளையராஜா நான் அவர்களை சந்தித்து பேசினேன், அதன் பிறகு தான் அவர்கள் உங்களை பார்க்க சொன்னார்கள் என்றார். நாகூர் ஹனிபா இதனைக் கேட்டு, “சரி நாளைக்கு காலைல வாங்க, பாடல் எழுதி வைக்கிறேன்” என்று இளையராஜாவை அனுப்பி வைத்துவிட்டார்.

#image_title

மறுநாள் இளையராஜா சொன்னபடியே வர நாகூர் ஹனிபா பாடல் வரிகளையும் எழுதி வைத்திருந்தார். உடனே வீட்டில் இருந்த ஹார்மோனிய பெட்டியை எடுத்து இளையராஜாவிடம் கொடுத்து வாசிங்க என்றார். உடனே டியூனை இளையராஜா வாசிக்க ’தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு…எங்கள் திரு நபியிடம் போய் சொல்லு.’ என்று ஹனிபா பாடி முடித்தார். அதன் பிறகு நாகூர் ஹனிபா இளையராஜாவைப் பார்த்து, ‘நீங்க வாசிக்கும் போது தென்றல் காற்றே உள்ள வந்தது மாதிரி உணர்ந்தேன்னு என்று சொல்லி, அபாரமான ஆற்றல் உங்களுக்கு இருக்கிறது.

#image_title

எங்கேயோ போகப் போகிறீர்கள் என அவர் தலையில் கையை வைத்து திரைத்துறையில் உங்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கு, நீங்க நல்லா வருவீங்க தம்பி’ என மனதாரப் பாராட்டி ஆசீர்வதித்தார். நபிகள் நாயகத்தின் புகழ் சேர்க்கும் அந்தப் பாடலுக்கு இசையமைத்தபின் இளையராஜாவுக்கு வந்த பட வாய்ப்புதான் அன்னக்கிளி. இவ்வாறு இளையராஜாவுக்கு இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்கள் அவரது வாழ்வின் பல அங்கங்களில் வகித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in CINEMA

To Top