30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூன் திரைப்படம் “ஆல் வி இமேஜின் அஸ் லைட்” . இந்த திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் cannes palme d or 2024 விருதுக்காக போட்டி பிரிவில் பங்கேற்கின்றது.

உலக அளவில் பிரபலமான பெரும் படைப்பாளிகளாக இருக்கும் பிரான்ஸ் போர்ட் கப்பூலா மற்றும் டேவிட் ரோகன் ஆகியோரின் படைப்புகளுடன் இப்படம் போட்டியிட உள்ளது. கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, சாயா கதம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இதில் பாலிவுட்டின் இளம் நாயகனாக இருக்கும் ஹிருது ஹாரூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் பிருந்தா மாஸ்டரின் தமிழ் படமான தக்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ஆல் வி இமேஜின் அஸ் லைட் படத்தின் டிரைலர், சர்வதேச அரங்கில் பெரும் பாராட்டுகளை குவித்து கவனம் ஈர்த்து வருகின்றது. வருகிற மே 25ஆம் தேதி கேன்ஸ் விழா அறிவிக்கப்பட உள்ளது. உலகம் முழுக்க திரையுலகத்தின் படைப்பாளிகளால் கொண்டாடப்படும் இந்த விழாவில் இந்த முறை ஒரு இந்திய திரைப்படம் கலந்து கொள்வது மிகப் பெருமையாக இருப்பதாக பலரும் தெரிவித்து வருகிறார்கள்.
