தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு வரும் இவர் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த அமராவதி என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தை இயக்குனர் செல்வா இயக்கி இருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்ட ஆபரேஷன் நடந்ததால் ஒன்றரை ஆண்டுகள் வீட்டில் இருந்தார்.
பின்னர் மீண்டும் பவித்ரா என்கின்ற திரைப்படத்தின் மூலமாக ரிஎன்றி கொடுத்தார். பின்னர் ஆசை, வான்மதி, கல்லூரி வாசல், காதல் கோட்டை, உல்லாசம், வாலி, அமர்க்களம், சிட்டிசன் உள்ளிட்ட பல ஹிட் திரைப்படங்களின் நடித்திருக்கின்றார் நடிகர் அஜித். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் துணிவு.
இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் நீண்ட நாட்களாக எடுக்கப்பட்டு வருகின்றது. இதை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்கின்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். இப்படம் தொடர்பான போஸ்டர் கூட நேற்று வெளியாகி வைரலாகி வந்தது.
பொதுவாக நடிகர் அஜித் பொது நிகழ்ச்சிகளிலும் நேர்காணலிலும் அதிகம் தலை காட்ட மாட்டார். அவர் முன்னாள் அளித்த நேர்காணலில் கூறிய சில விஷயங்கள் தற்போது வைரலாகி வருகின்றது. பல வருடத்திற்கு முன்பு ஜெயா டிவியில் நடிகர் சந்தானம் பேட்டி எடுக்க ஒரு நேர்காணலில் பங்கேற்று இருந்தார் நடிகர் அஜித். அதில் பல விஷயங்களைப் பற்றி பகிர்ந்திருந்தார்.
பில்லா திரைப்படம் குறித்து பேசி இருந்த அஜித் பில்லா திரைப்படம் ஏற்கனவே ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்தது. அதனால் அப்படத்தைப் போல இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அவரைப் போல நான் ரீகிரியேஷன் எதுவும் செய்து விடக்கூடாது. ஏதோ ஒரு சமயத்தில் அது ரஜினி ரசிகர்களை காயப்படுத்தி விட்டால் மிகப்பெரிய பிரச்சனை ஆகிவிடும் என்பதால் ரஜினி அவர்களின் பில்லா படத்தை போல் இல்லாமல் வேறொரு ஜானரில் இப்படத்தை எடுத்தோம்.
மேலும் கமலஹாசன் நடித்த சகலகலா வல்லவன் திரைப்படத்தை ரீமேக் செய்ய எனக்கு ஆசை இருந்தது. அதற்கு முதலில் கமலிடம் அனுமதி கேட்க வேண்டும். மேலும் அப்படத்தின் காப்புரிமை யாரிடம் இருக்கிறது என்பதை அறிந்து அவரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று கூறியிருந்தார். இது பல வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட பேட்டி. ஆனால் தற்போது வரை அவரின் ஆசை நிறைவேறவே இல்லை.