Connect with us

தமிழக மக்களே உஷார்..! இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.. 2 கோடி பேரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி..!

CINEMA

தமிழக மக்களே உஷார்..! இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.. 2 கோடி பேரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி..!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அண்மையில் பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கத்தால் 16 வயது சிறுவன் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இதை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் அனைவரும் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடர் கன மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் திடீரென்று வெல்லும் வருவதற்கு வாய்ப்பிருப்பதாக பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் நீர்வீழ்ச்சி மற்றும் அதை ஒட்டி இருக்கும் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று குறுஞ்செய்தி வாயிலாக தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

   

இது குறித்து பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது “தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் இயல்பு நிலையைக் காட்டிலும் அதிகரித்து இருந்தது. இந்தியா வானிலை ஆய்வு மையம் வரும் 21ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

 

நேற்று காலை 8:30 மணி நிலவரம் படி தூத்துக்குடியில் இடி மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் .கன மழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 15 கால்நடைகள் இறந்துள்ளன. கனமழை எச்சரிக்கை வந்துள்ள நிலையில் பேரிடர் சூழலை திறம்பட கையாள வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும்.

மேலும் குமரி கடல், மன்னார்குளைகுடா மற்றும் அதை அடுத்துள்ள தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 வரை பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்” என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்பதால் சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top