கணவனின் கள்ளஉறவைக் கண்டித்ததால், 26 வயது இளம்பெண் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பீதர் தாலுக்காவின் ஹொன்னிகேரி கிராமத்தைச் சேர்ந்த சஞ்சனா என்ற பெண்ணே இவ்வாறு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலைச் சம்பவம் தொடர்பாக, இந்திய ராணுவத்தில் பணியாற்றி வரும் அவரது கணவர் பகவத் ஞானேஷ்வர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இந்தத் தம்பதியினர், பீதரில் உள்ள சிவனகர் பகுதியில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
ஆரம்பத்தில் இவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாகச் சென்ற நிலையில், பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் பகவத்திற்கு திருமணத்திற்குப் புறம்பான கள்ளஉறவு இருப்பது சஞ்சனாவிற்குத் தெரியவந்தது. இதனை சஞ்சனா தட்டிக்கேட்டதால், தம்பதியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த ஜூன் 25 ஆம் தேதி அன்று, சஞ்சனாவை பிரார்த்தனைக்காக பால்கி தாலுக்காவில் உள்ள மைலர் மல்லண்ணா கோவிலுக்கு பகவத் காரில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து திரும்பி வரும் வழியில், ஹொன்னிகேரி வனப்பகுதியின் ஜகதேஸ்வரி மடம் அருகே காரை நிறுத்தி, மறைத்து வைத்திருந்த இரும்புக் கம்பியால் சஞ்சனாவின் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பகவத் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இத்தாக்குதலில் படுகாயமடைந்த சஞ்சனா, உடனடியாக சிகிச்சைக்காக மகாராஷ்டிர மாநிலம் சோலாபூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக பீதரில் உள்ள BRIMS மருத்துவமனை சவக்கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டது. இக்கோரச் சம்பவம் குறித்து தன்னூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ராணுவ வீரர் பகவத்தை தீவிரமாகத் தேடி அடுத்தகட்ட விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
ஆன்லைன் கடன் செயலிகளின் பேராசைக்கும், டிஜிட்டல் மிரட்டல்களுக்கும் மற்றுமொரு இளம் உயிர் பலியாகியிருக்கும் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம்…
அமெரிக்கப் பொருளாதாரத் தரவுகளின் அதிரடி மாற்றத்தால், சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை குதிரை வேகத்தில் எகிறத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் வெளியான…
தமிழகப் பள்ளி கல்வித்துறையில் பல்வேறு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் 200 கோடி ரூபாய் வரை மோசடி…
தற்போது பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் கோடை வெயில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி, வரலாறு காணாத…
சமூக வலைத்தளமான 'X' தளத்தில் சுமன் ரஸ்தோகி என்பவரால் பகிரப்பட்ட அதிர்ச்சியூட்டும் லாரி விபத்து வீடியோ ஒன்று தற்போது இணையத்தில்…
ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள மக்கள் தங்களின் வீடுகளை…