தமிழக அரசியல் களம் தினந்தோறும் புதிய திருப்பங்களைச் சந்தித்து வரும் வேளையில், தற்போதைய ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்கை கூட்டணி என்று கூறிவந்த திமுகவின் கூட்டணிக் கட்சிகள் தவெக பக்கம் சாய்ந்துள்ள நிலையிலும், அதிமுகவின் உட்கட்சி மோதல் காரணமாக 6 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெக-வில் இணைந்துள்ள நிலையிலும், இந்த புதிய அரசியல் சதி வலை அம்பலமாகியுள்ளது.
இந்த சதித் திட்டம் தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவெக-வின் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி உறுப்பினரான Dr.N. இளையராஜாவை, திருநாவுக்கரசு என்ற நபர் கைபேசி வழியாகத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, தமிழ்நாடு சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வர உள்ளதாகவும், ஆளுங்கட்சி உறுப்பினராக இருந்தாலும் தவெக-விற்கு எதிராக வாக்கெடுப்பில் பங்கேற்க வேண்டும் என்றும், அதற்கு சன்மானமாக ரூ.35 கோடி வரை தருவதாகவும் ஆசைவார்த்தை காட்டி பேரம் பேசியுள்ளார்.
குதிரை பேர முயற்சி குறித்து அதிர்ச்சியடைந்த தவெக எம்.எல்.ஏ இளையராஜா, உடனடியாக சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் அதிரடி விசாரணையில் இறங்கிய சென்னை போலீசார், சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, அவருக்குப் பின்னணியாகச் செயல்பட்ட திருச்சியைச் சேர்ந்த நரேஷ் மற்றும் சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் ஆகிய மூன்று திமுகவினரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், இந்த அரசியல் சதியின் பின்னணியில் திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான V. செந்தில்பாலாஜியின் சகோதரர் V. அசோக்குமார் என்பவருக்கு நேரடித் தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அசோக்குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது தலைமறைவாகியுள்ளதாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இதன் அடுத்த கட்டமாக, இந்த சதித் திட்டத்தில் செந்தில் பாலாஜிக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சென்னை போலீசார் கரூரில் முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கரூரில் உள்ள செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடு, பண்ணை வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் சுற்றி வளைத்து தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த சோதனை தீவிரமாக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசியலில் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வழக்கறிஞர் அணியின் இணைச் செயலாளர் ஞானசௌந்தரி, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது லஞ்சப்…
அதிமுகவின் உட்கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தவும், அண்மைய அரசியல் மாற்றங்களை எதிர்கொள்ளவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) ஒரு புதிய…
தமிழ்நாடு அரசியல் களம் தற்போது 'திமுக Vs தவெக' என்ற புதிய பரிமாணத்தை எட்டியுள்ள நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான…
மதிமுகவின் முக்கிய முகமாக விளங்கி மறைந்த ஈரோடு முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தியின் மகன் கபிலன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில்…
நாடு முழுவதும் 5G சேவைகளை அதிவேகமாக விரிவுபடுத்துவதற்காக ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடந்த சில…
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள தீபாம்பாள்புரம் கிராமத்தில், மிகவும் பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற வன்மீகநாதர் கோவில் அமைந்துள்ளது.…