அடச்சீ என்ன பொழப்பு இதெல்லாம்…. பாக்கியராஜ் இறுதி சடங்கில் கூட இப்படியா?… உண்மையை உலறி கொட்டிய பார்த்திபன்…!

Spread the love

திரைக்கதை மன்னன் என்று தமிழ் சினிமாவால் கொண்டாடப்பட்ட இயக்குநர் பாக்யராஜின் மறைவு, ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரையுலகினரையும் இன்னும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. பாக்யராஜின் இறுதி அஞ்சலி மற்றும் இறுதி ஊர்வலத்தின்போது, அவரது குடும்ப உறுப்பினரைப் போலவே முன்னின்று அனைத்து காரியங்களையும் கவனித்துக் கொண்டவர் இயக்குநர் பார்த்திபன். இறுதி ஊர்வலம் முதல் தகனம் வரை ஓய்வில்லாமல் ஓடித்திரிந்த பார்த்திபன், அந்த இக்கட்டான மற்றும் சோகமான சூழ்நிலையில் தனக்கு நேர்ந்த ஒரு கசப்பான அனுபவத்தை நினைத்து தற்போது வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.

சமீபத்தியில் பேட்டி ஒன்றில் பார்த்திபன் பேசுகையில், பாக்யராஜ் சாரின் இறுதி ஊர்வலத்தில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் இருந்ததாகக் குறிப்பிட்டார். “ஒரு அடி கூட நகர முடியாத அளவுக்கு கூட்டம் இருந்த அந்த நேரத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் அஞ்சலி செலுத்திவிட்டு வெளியேற முயன்றார். ஆனால், கூட்ட நெரிசலால் அவரால் காரை நோக்கிச் செல்ல முடியவில்லை. இதனால் மனிதாபிமான அடிப்படையில், நானே அவரைப் பாதுகாப்பாக கூட்டத்தில் இருந்து அழைத்துச் சென்று காரில் ஏற்றிவிட்டேன்,” என்று பார்த்திபன் அந்த இக்கட்டான சூழலை விவரித்தார்.

ஆனால், அப்படிப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும்போது சுமார் 300 கேமராக்கள் தங்களைச் சூழ்ந்து கொண்டதாகக் கூறிய பார்த்திபன், அங்கிருந்த ஒருவர் கேட்ட கேள்வி தன்னை நிலைகுலையச் செய்ததாகக் கூறினார். “கூட்டத்தை விலக்கி கீர்த்தியை காரில் ஏற்றிவிட்டுக் கொண்டிருக்கும் போது, அங்கிருந்த ஒருவர் ‘இப்போ திரிஷா வந்தா என்ன பண்ணுவீங்க?’ என்று என்னிடம் கேட்டார். ஒரு நெருங்கியவரை இழந்து நிற்கும் அந்தத் துக்கமான நேரத்தில் கூட இப்படித்தான் கேள்வி கேட்க வேண்டுமா? இதெல்லாம் சரியா? என்று எனக்குள் பெரும் வருத்தமாக இருந்தது,” என மனம் நொந்து பேசியுள்ளார்.

பார்த்திபன் இப்படி வேதனைப்படக் காரணம், சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் சமயத்தில் விஜய்யும் திரிஷாவும் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றபோது எழுந்த சர்ச்சையாகும். அப்போது திரிஷா குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பார்த்திபன் தனது வழக்கமான பாணியில், “குந்தவை கொஞ்ச நாள் வீட்டில் குந்த வைத்தால் நல்லது” என்று விளையாட்டாகப் பேச, அது சமூக வலைத்தளங்களில் பெரிய புயலைக் கிளப்பியது. பின்னர் அதற்கு பார்த்திபன் மன்னிப்பும் கேட்டிருந்தார். அந்தப் பழைய சம்பவத்தை மனதில் வைத்து, ஒரு மரண வீட்டின் துக்கத்தைக் கூட மதிக்காமல் சிலர் பரபரப்புக்காக இப்படிப் பேசியதுதான் பார்த்திபனை வேதனைப்படுத்தியுள்ளது. இதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் பார்த்திபனுக்கு ஆதரவாகவும், அந்த நேரத்தில் பரபரப்பைத் தேடியவர்களுக்கு எதிராகவும் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

SATHISH R

Recent Posts

BREAKING: லஞ்சம் வாங்கிய புஸ்ஸி ஆனந்த்… CM விஜய்க்கு அடுத்த ஷாக்… சற்றுமுன் பரபரப்பு…!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வழக்கறிஞர் அணியின் இணைச் செயலாளர் ஞானசௌந்தரி, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது லஞ்சப்…

1 minute ago

“டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்”… கட்சி மாறுபவர்களுக்கு செக் வைத்த இபிஎஸ்… தமிழக அரசியலை உலுக்கப் போகும் இபிஎஸ்-ஸின் திடீர் முடிவு…!

அதிமுகவின் உட்கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தவும், அண்மைய அரசியல் மாற்றங்களை எதிர்கொள்ளவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) ஒரு புதிய…

29 minutes ago

“யாரு பெருசுன்னு அடிச்சு காட்டு”… திமுக Vs தவெக…. தமிழக அரசியலை உலுக்கும் புனிதர் விவாதம்… அம்பலமாகும் ரகசியங்கள்…!

தமிழ்நாடு அரசியல் களம் தற்போது 'திமுக Vs தவெக' என்ற புதிய பரிமாணத்தை எட்டியுள்ள நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான…

34 minutes ago

வைகோவுக்கு அடுத்த ஷாக்…. மதிமுகவில் இருந்து கொத்தாக தூக்கிய திமுக…. தமிழக அரசியலில் நள்ளிரவில் மாறிய கணக்கு….!

மதிமுகவின் முக்கிய முகமாக விளங்கி மறைந்த ஈரோடு முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தியின் மகன் கபிலன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில்…

41 minutes ago

காலையிலேயே மக்களுக்கு அடுத்தடுத்த ஷாக்… ரீசார்ஜ் கட்டணங்கள் அதிரடி உயர்வு… திடீர் அறிவிப்பு…!

நாடு முழுவதும் 5G சேவைகளை அதிவேகமாக விரிவுபடுத்துவதற்காக ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடந்த சில…

43 minutes ago

காலையிலேயே அடுத்த பரபரப்பு… ரூ. 1 லட்சம் லஞ்சம்… அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமி கைது… லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி ஆபரேஷன்…!

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள தீபாம்பாள்புரம் கிராமத்தில், மிகவும் பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற வன்மீகநாதர் கோவில் அமைந்துள்ளது.…

45 minutes ago