2024 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ள நிலையில் 2025 ஆம் ஆண்டை வரவேற்க அனைவரும் தயாராகிவிட்டனர். இந்த வருடம் மக்கள் அனைவரும் திரையரங்குகளை நோக்கி படையெடுக்கும் அளவுக்கு பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் இந்தியா முழுவதும் வெளியாகி உள்ளன. முதல் ஆறு மாதம் மலையாள திரை உலகத்திற்கு பொற்காலமாக இருந்த நிலையில் அதன் பிறகு கோலிவுட், டோலிவுட், பாலிவுட் இந்த ஆண்டு சூடு பிடித்துள்ளது. 500 கோடி முதல் ஆயிரம் கோடி வரை பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்கள் வெளியாகி உள்ள நிலையில் இந்த ஆண்டு கூகுளில் மக்களால் அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஸ்ட்ரீட் 2:
இந்த திரைப்படம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அமீர் கவுசிக் இயக்கத்தில் ஷ்ரத்தா கபூர், ராஜ்குமார் ராவ் மற்றும் தமன்னா உள்ளிட்டோர் நடித்த இந்த திரைப்படம் ஹிந்தியில் மட்டுமே வெளியாகி 700 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
கல்கி 2898 ஏடி:
பிரபாஸ் நாயகனாக நடிக்க அமிதாபச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. நாக் அஸ்வின இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் இந்த வருடம் வெளியான திரைப்படங்களில் அதிக வசூலை ஈட்டி உள்ளது.
12th ஃபெயில்:
விக்ராந்த் மசாய் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வேட்டையை நடத்தியது.
லாபதா லேடிஸ்:
அமீர்கானின் X மனைவி கிரண் ராவ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் இப்பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இந்த படம் பாலிவுட் ரசிகர்களை மட்டும் இந்திய அளவில் ஓடிடி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. மேலும் இந்த வருடம் இந்தியா சார்பில் ஆஸ்காருக்கு அனுப்பப்பட்ட படமாகவும் இந்த படம் தேர்வானது.
ஹனுமான்;
மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் திரைப்படத்தையே வீழ்த்தி தெலுங்கில் வெளியான ஹனுமான் திரைப்படம் இந்த ஆண்டு இந்திய ரசிகர்களை கவர்ந்து 300 கோடி வரை பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தது. இந்த பட்டியலில் இப்படம் 5வது இடத்தை பிடித்துள்ளது.
மகாராஜா:
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷயப், அபிராமி மற்றும் சாசனா ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது சீனாவிலும் வெளியாகி 60 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளது.
மஞ்சுமெல் பாய்ஸ்!
குணா குகையின் டெவில்ஸ் கிச்சனில் விழுந்த சுபாஷை அவரது நண்பர்கள் மீட்ட கதையை மையமாகக் கொண்டு இந்த ஆண்டு வெளியான மலையாள படமான இப்படம் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. வெறும் 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 240 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது.
கோட்:
விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் இப்பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. விஜய் சேதுபதியின் மகாராஜா மற்றும் விஜயின் கோட் என இரண்டு தமிழ் படங்களை மட்டுமே இந்த ஆண்டு ரசிகர்கள் அதிக அளவில் கூகுளில் தேடியுள்ளனர்.
சலார்:
பிரபாஸில் சலார் படத்தையும் ரசிகர்கள் அதிக அளவில் கூகுளில் தேடிய நிலையில் இப்படம் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது. அடுத்த ஆண்டு டாப் 10 தேடல்களில் கண்டிப்பாக புஷ்பா 2 நம்பர் 1 அல்லது டாப் 5 இடங்களை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆவேசம்:
கூகுளில் தேடப்பட்ட படங்களில் மலையாள படமான ஆவேசம் பத்தாவது இடத்தை பிடித்துள்ளது. பகத் பாஸில் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலம் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப்…
சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் விஜய் ஆற்றிய உரை, தங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக மாநிலத்தின் பல்வேறு தரப்பு பெண்கள்…
தமிழக அரசியலில் தவெகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு பிந்தைய அரசியல் நகர்வுகள், தற்போதைய இடைத்தேர்தல் சூழலில் புதிய திருப்பத்தை…
மத்திய அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த…
பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் நோக்கில் தமிழக அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு எண்கள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அதுவே தற்போது புதிய…
தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4…