தமிழ் சினிமாவில் வில்லன் கேரக்டர்கள் கச்சிதமாக பொருந்தும் என்றால் அது ரகுவரனுக்கு தான். முதல்வன் திரைப்படத்தில் ரகுவரன் பேசிய டயலாக் இல்லை என்றால் படமே இல்லை. இதனைப் போல மார்க் ஆண்டனி இல்லை என்றால் பாட்ஷா திரைப்படம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு ரகுவரன் வில்லனாக நடித்ததால் பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன. கோடம்பாக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற நடிப்பு சூறாவளி 90களில் உச்சம் தொட்ட போது அவருக்கு ஈடு கொடுத்து நடித்து தன்னுடைய நடிப்பால் ஆண்டனி கதாபாத்திரத்தையும் மக்கள் மத்தியில் நிறுத்தியவர் தான் ரகுவரன். கேமரா முன்பு வந்து விட்டாலே நடிப்பு ராட்சசன் ஆக மாறி விடுவார். திரை உலகமே கொண்டாடிய கலைஞர்கள் பட்டியலில் ரகுவரனுக்கு தனி ஒரு இடம் உண்டு.
கேரளாவின் பாலக்காடு, தமிழ் சினிமாவுக்கு தந்த அற்புத கலைஞன் தான் ரகுவரன். இவர் முதலில் அடையாறு திரைப்பட கல்லூரியில் நடிப்புக்கான பட்டப் படிப்பை முடித்த பிறகு சில காலம் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். 1982 ஆம் ஆண்டு தன்னுடைய 23 வயதில் ஏழாவது மனிதன் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இந்த திரைப்படத்திற்கு விருதுகள் கிடைத்தது. ஹீரோவாக அறிமுகமான அடுத்த ஆண்டு சில்க் சில்க் சில்க் என்ற படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார். பிறகு 1986 ஆம் ஆண்டு விசு உடன் அவர் நடித்த சம்சாரம் அது மின்சாரம் என்ற திரைப்படம் சூப்பர் ஹிட் கொடுத்தது.
இதனைத் தொடர்ந்து சிவா, ஊர்க்காவலன், ராஜா சின்ன ரோஜா உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். எந்த கேரக்டராக இருந்தாலும் அதற்கு உயிர் கொடுக்கும் வல்லமை இவருக்கு உள்ளது. அந்த காரணத்தினால் அவர் மறைந்தும் இத்தனை வருடங்கள் ஆனாலும் நாம் அவரை மிஸ் செய்கிறோம். தற்போது அவருடைய மனைவி ரோகினி எமோஷனலாக ஒரு பதிவை போட்டுள்ளார்.
அதில், ரகுவின் பிறந்தநாள் டிசம்பர் 10 என அவரின் அம்மா சொல்வார். ஆனால் ரகு இல்லை 11ஆம் தேதி தான் என சொல்வார். காரணம் அந்த தேதியில் தான் பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் பிறந்துள்ளார். அதனால் கூட ரகு அந்த தேதியை விரும்பி இருக்கலாம் என்று நான் நினைக்கின்றேன். இவர்கள் இருவருமே எனக்கு மிகவும் பிடித்த நடிகர்கள். மிஸ் யூ ரகு என ரோகிணி உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவருடைய இந்த பதிவு ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி…
தமிழக அரசியலையும் திரைத்துரையையும் என்றும் பிரித்துப் பார்க்க முடியாது என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் பல உள்ளன. கடந்த அரை நூற்றாண்டில்…
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலக்கவுண்டனூரைச் சேர்ந்த சிமெண்ட் செங்கல் வியாபாரி பூபதி என்பவர், வழிப்பறி கொள்ளையர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாகக்…
தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி மற்றும் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தமிழக முதல்வர் விஜய் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி பிரிட்டன்…
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தலைமைச் செயலகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில், மாநிலத்தின் மிக முக்கியத் துறைகளான…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றித் கழகத்திடம் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு, அண்ணா அறிவாலயத்தின் நீண்ட அமைதியை உடைக்கத் திமுக…