தமிழக அரசியலையும் திரைத்துரையையும் என்றும் பிரித்துப் பார்க்க முடியாது என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் பல உள்ளன. கடந்த அரை நூற்றாண்டில் தமிழகத்தை ஆட்சி செய்த தலைவர்களில் பெரும்பாலானோர் சினிமாவுடன் ஆழமான தொடர்பு கொண்டவர்களே. பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் தொடங்கி ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வரை திரைத்துறையின் தாக்கம் அரசியலில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எம்.ஜி.ஆருக்குப் பிறகு சிவாஜி கணேசன், பாக்யராஜ், டி.ராஜேந்தர், சரத்குமார் எனப் பலர் முயற்சி செய்தபோதிலும், தற்போது விஜய் அடைந்துள்ள அரசியல் வெற்றி, திரையுலகினரிடையே மீண்டும் ஒரு பெரிய அரசியல் ஆசையைத் தூண்டியுள்ளது.
விஜய்யின் இந்த அதிரடி அரசியல் வெற்றியத் தொடர்ந்து, விஷால், தனுஷ், சூர்யா, ராகவா லாரன்ஸ் போன்ற முன்னணி நடிகர்களும் அடுத்தடுத்து அரசியலுக்கு வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அவர்களது ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. நற்பணி மன்றங்களை வலுப்படுத்துவது, கொடி அறிமுகம் செய்வது மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்துவது என நடிகர்கள் பலரும் மக்கள் மத்தியில் தங்களை அரசியல் ரீதியாக முன்னிறுத்தத் தொடங்கியுள்ளனர். சினிமா புகழை அடித்தளமாகக் கொண்டு மக்கள் சேவையில் இறங்குவது தமிழக அரசியல் களத்தில் மீண்டும் ஒரு புதிய அலை உருவாகி வருவதை உணர்த்துகிறது.
இந்த அரசியல் சூறாவளியில் ஒரு சுவாரஸ்யமான திருப்பமாக, பிரபல தொழிலதிபரும் நடிகருமான ‘லெஜெண்ட்’ சரவணன் அண்ணாச்சி அரசியலில் களமிறங்குவதற்கான முதற்கட்ட ஆயத்தப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார். தொழில்துறையில் தனக்கென ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கிய அவர், விளம்பரங்கள் மற்றும் ‘தி லெஜெண்ட்’ திரைப்படம் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர். தற்போது அவர் தமிழகம் முழுவதும் தனக்கான ஆதரவு தளத்தைப் பெருக்கும் வகையில், தனது ரசிகர் மன்ற கட்டமைப்புகளை மிகவும் தொழில்முறை அரசியல் கட்சி போல உருவாக்கி வருகிறார்.
இதன் முதற்கட்டமாக, ரசிகர் மன்றத்தின் அகில இந்திய தலைவராக முத்துதுரை என்பவரை நியமித்து, தமிழகத்தை நான்கு மண்டலங்களாகப் பிரித்து மாவட்ட நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் ஒரு அரசியல் கட்சியில் இருப்பது போன்றே மாணவர் அணி, இளைஞரணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி, ஆட்டோ ஓட்டுநர் அணி எனப் பல்வேறு சார்பு அணிகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காகத் தனி வாட்ஸ்-அப் குழுக்கள் தொடங்கப்பட்டு, கட்சியின் அடிமட்ட வேலைகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன.
இந்தச் சூழ்நிலையில், வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி பாடியில் உள்ள லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸில் பிரம்மாண்டமான ரசிகர்கள் சந்திப்பு மற்றும் நிர்வாகிகளுக்கான நியமனச் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற உள்ளது. தற்போது ரசிகர் மன்றம் என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்படும் இந்த இயக்கம், கூடிய விரைவில் ஒரு புதிய அரசியல் கட்சியாக உருவெடுப்பதற்கான முன்னோட்டமே என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இதன் மூலம் தமிழக அரசியல் களம் வரும் நாட்களில் மேலும் பல திருப்பங்களைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சர்வதேசக் கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து…
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் அரங்கேறி வரும் விவாதங்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதில் திமுக சார்பில்…
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த கீரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தேவி (45). இவரது மகள் சுவாதி (23). நேற்று தாய்…
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த செங்கல் மற்றும் சிமெண்ட் கற்கள் வியாபாரியான பூபதி (45) என்பவர்,…
த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி பெற்ற கழகம் தலைவர் விஜய் 108 இடங்களை மட்டுமே கைப்பற்றிய போதிலும்,…
தமிழக சட்டசபையில் காவலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும்…