தமிழக சட்டசபையில் காவலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே கடும் காரசாரமான விவாதம் ஏற்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், தற்போதைய ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், தவெக அரசு புதிய திட்டங்களைச் செயல்படுத்தாமல் பெயர் மாற்ற அறிவிப்புகளையே வெளியிட்டு ‘ரிவர்ஸ் கியரில்’ செல்வதாகவும் சாடினார். மேலும், சட்டமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு முதலமைச்சர் நேரடியாகப் பதிலளிக்காமல், டிவி சீரியல் கதாபாத்திரங்களைப் போல அமைச்சர்கள் மாறி மாறிப் பதிலளிப்பதாகக் கடுமையான விமர்சனங்களை வைத்தார்.
எதிர்க்கட்சித் தலைவரின் இந்த அடுக்கடுக்கான விமர்சனங்களுக்கு முதலமைச்சர் விஜய் உடனடியாகத் தன் பாணியில் பதிலடி கொடுத்தார். அவை நடவடிக்கைகளின் போது, “எதிர்க்கட்சியினர் வைக்கும் அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் நான் தெளிவாகவும் விரிவாகவும் பதிலளிக்கத் தயார்; ஆனால், நான் பதில் அளிக்கும் போது எதிர்க்கட்சியினர் யாரும் பாதியிலேயே எழுந்திருந்து ஓடிவிடக் கூடாது என்று சபாநாயகர் வாயிலாக அவர்களிடம் ஒரு உறுதிமொழியைக் கேட்கிறேன்” எனத் தைரியமாகத் தெரிவித்தார். முதலமைச்சரின் இந்த அதிரடிப் பேச்சு சட்டமன்ற உறுப்பினர்களிடையே பெரும் பரபரப்பையும் கைதட்டலையும் ஏற்படுத்தியது.
இரு தலைவர்களுக்கும் இடையே நடந்த இந்த விவாதத்தைக் கூர்ந்து கவனித்த சபாநாயகர், அவைச் சூழலை அமைதிப்படுத்தும் வகையில் தனது கருத்தைப் பதிவு செய்தார். முதலமைச்சரின் பதிலும் அணுகுமுறையும் தயக்கத்துடன் கூடியதாக இல்லாமல், முழுமையான தயார்நிலையுடன் சட்டமன்றத்திற்கு வந்திருப்பதை உணர்த்துவதாகச் சுட்டிக்காட்டினார். முதலமைச்சர் விஜய் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இடையிலான இந்த நேருக்கு நேர் வார்த்தை மோதல், தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாகவும் கவனத்தைப் பெற்ற நிகழ்வாகவும் மாறியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள புடவைக்கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அவாத் புராவைச்…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சர்வதேசக் கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து…
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் அரங்கேறி வரும் விவாதங்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதில் திமுக சார்பில்…
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த கீரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தேவி (45). இவரது மகள் சுவாதி (23). நேற்று தாய்…
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த செங்கல் மற்றும் சிமெண்ட் கற்கள் வியாபாரியான பூபதி (45) என்பவர்,…
த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி பெற்ற கழகம் தலைவர் விஜய் 108 இடங்களை மட்டுமே கைப்பற்றிய போதிலும்,…