சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த செங்கல் மற்றும் சிமெண்ட் கற்கள் வியாபாரியான பூபதி (45) என்பவர், சரபங்கா ஆற்றுப்பகுதியில் காரின் முன்சீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். இச்சம்பவம் தொடர்பாக அவரது மனைவி சுஜிதாஸ்ரீ, மர்ம நபர்கள் வந்து தன் கணவரைக் கொன்றுவிட்டுத் தனது நகைகளைப் பறித்துச் சென்றுவிட்டதாகப் போலீசாரிடம் கூறி கதறியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆய்வு செய்தபோது, கார் மற்றும் மனைவியின் உடலில் எந்தவிதமான ரத்தக் கறையோ காயங்களோ இல்லாததால் சந்தேகம் அடைந்து சுஜிதாஸ்ரீயிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், சுஜிதாஸ்ரீக்கு எதிரே வசித்து வரும் பெங்களூரு ஐடி ஊழியரான சந்தோஷ் ராஜ் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது அம்பலமானது.
கள்ளக்காதல் விவகாரம் கணவர் பூபதிக்குத் தெரியவந்ததால் ஏற்பட்ட தகராறில், பூபதியைத் தள்ளிவிட்டு மயக்கமடையச் செய்த சுஜிதாஸ்ரீ, காதலன் சந்தோஷ் ராஜை வரவழைத்துக் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர் கணவரின் உடலைக் காரின் முன்சீட்டில் அமர வைத்து ஆற்றுப்பகுதிக்குக் கொண்டு சென்று நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து சுஜிதாஸ்ரீயைப் போலீசார் கைது செய்த நிலையில், அவரது காதலன் சந்தோஷ் ராஜிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியா (40). இவர் அப்பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். இவரது அக்கா…
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள புடவைக்கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அவாத் புராவைச்…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சர்வதேசக் கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து…
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் அரங்கேறி வரும் விவாதங்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதில் திமுக சார்பில்…
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த கீரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தேவி (45). இவரது மகள் சுவாதி (23). நேற்று தாய்…
த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி பெற்ற கழகம் தலைவர் விஜய் 108 இடங்களை மட்டுமே கைப்பற்றிய போதிலும்,…