2024 இல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய படங்கள்.. டாப் 10 லிஸ்ட் இதோ..!

By Nanthini on மார்கழி 11, 2024

Spread the love

2024 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ள நிலையில் 2025 ஆம் ஆண்டை வரவேற்க அனைவரும் தயாராகிவிட்டனர். இந்த வருடம் மக்கள் அனைவரும் திரையரங்குகளை நோக்கி படையெடுக்கும் அளவுக்கு பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் இந்தியா முழுவதும் வெளியாகி உள்ளன. முதல் ஆறு மாதம் மலையாள திரை உலகத்திற்கு பொற்காலமாக இருந்த நிலையில் அதன் பிறகு கோலிவுட், டோலிவுட், பாலிவுட் இந்த ஆண்டு சூடு பிடித்துள்ளது. 500 கோடி முதல் ஆயிரம் கோடி வரை பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்கள் வெளியாகி உள்ள நிலையில் இந்த ஆண்டு கூகுளில் மக்களால் அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Street 2' advance box office report: Shraddha Kapoor's 'Humongous' is expected to hit theaters at Rs 300 crore | Udaipur Kiran

   

ஸ்ட்ரீட் 2:

   

இந்த திரைப்படம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அமீர் கவுசிக் இயக்கத்தில் ஷ்ரத்தா கபூர், ராஜ்குமார் ராவ் மற்றும் தமன்னா உள்ளிட்டோர் நடித்த இந்த திரைப்படம் ஹிந்தியில் மட்டுமே வெளியாகி 700 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

 

Kalki 2898 AD would have cast Mohanlal to play villain|'கல்கி 2898 ஏடி': கமல்ஹாசன் இல்லையென்றால் யார் தெரியுமா?

கல்கி 2898 ஏடி:

பிரபாஸ் நாயகனாக நடிக்க அமிதாபச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. நாக் அஸ்வின இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் இந்த வருடம் வெளியான திரைப்படங்களில் அதிக வசூலை ஈட்டி உள்ளது.

திரைப் பார்வை: 12th ஃபெயில் | வெளிச்சமென்பது வெளியேயில்லை | 12th Fail movie review - hindutamil.in

12th ஃபெயில்:

விக்ராந்த் மசாய் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வேட்டையை நடத்தியது.

ஆஸ்கர் பரிந்துரையில் 'லாபதா லேடீஸ்' - வலுக்கும் எதிர்ப்பு | criticisms against laapata ladies oscar entry - hindutamil.in

லாபதா லேடிஸ்:

அமீர்கானின் X மனைவி கிரண் ராவ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் இப்பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இந்த படம் பாலிவுட் ரசிகர்களை மட்டும் இந்திய அளவில் ஓடிடி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. மேலும் இந்த வருடம் இந்தியா சார்பில் ஆஸ்காருக்கு அனுப்பப்பட்ட படமாகவும் இந்த படம் தேர்வானது.

Hanuman Review: ஹனுமன் விமர்சனம்.. சூப்பர் ஹீரோ பிளஸ் தெய்வீக சக்தி.. ஹிட் அடித்ததா? | Hanuman Review in Tamil: A New Super Hero in Tollywood - Tamil Filmibeat

ஹனுமான்;

மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் திரைப்படத்தையே வீழ்த்தி தெலுங்கில் வெளியான ஹனுமான் திரைப்படம் இந்த ஆண்டு இந்திய ரசிகர்களை கவர்ந்து 300 கோடி வரை பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தது. இந்த பட்டியலில் இப்படம் 5வது இடத்தை பிடித்துள்ளது.

Maharaja: சீனாவில் வசூலை குவிக்கும் மகாராஜா.. 150 கோடி கிளப்பில் இணைந்த மக்கள் செல்வன்! | Actor Vijay sethupathi's Maharaja movie collects more than 40 crores and joined 150 crore club ...

மகாராஜா:

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷயப், அபிராமி மற்றும் சாசனா ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது சீனாவிலும் வெளியாகி 60 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

தமிழ்நாட்டு திரையரங்குகளில் கொண்டாடப்படும் மஞ்சுமெல் பாய்ஸ்.. கமல் கத்தியதை உணர 34 வருசம் ஆயிருக்கு | Manjummel Boys celebrated in theaters : Tamil Nadu interested in ...

மஞ்சுமெல் பாய்ஸ்!

குணா குகையின் டெவில்ஸ் கிச்சனில் விழுந்த சுபாஷை அவரது நண்பர்கள் மீட்ட கதையை மையமாகக் கொண்டு இந்த ஆண்டு வெளியான மலையாள படமான இப்படம் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. வெறும் 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 240 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது.

கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் ஆனாரா விஜய்? கோட் - திரை விமர்சனம்!

கோட்:

விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் இப்பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. விஜய் சேதுபதியின் மகாராஜா மற்றும் விஜயின் கோட் என இரண்டு தமிழ் படங்களை மட்டுமே இந்த ஆண்டு ரசிகர்கள் அதிக அளவில் கூகுளில் தேடியுள்ளனர்.

The film crew released the action announcement of Salaar | சலார் படத்தின் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

சலார்:

பிரபாஸில் சலார் படத்தையும் ரசிகர்கள் அதிக அளவில் கூகுளில் தேடிய நிலையில் இப்படம் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது. அடுத்த ஆண்டு டாப் 10 தேடல்களில் கண்டிப்பாக புஷ்பா 2 நம்பர் 1 அல்லது டாப் 5 இடங்களை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வசூலில் பட்டையை கிளப்பும் ஆவேசம் திரைப்படம்!! அதுக்குள்ள OTT ரிலீஸ்ஸா..

ஆவேசம்:

கூகுளில் தேடப்பட்ட படங்களில் மலையாள படமான ஆவேசம் பத்தாவது இடத்தை பிடித்துள்ளது. பகத் பாஸில் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.