புத்தகம் எங்க?… போய் வெயில்ல நில்லு… ஆசிரியரின் கொடூர தண்டனையால்… பறிபோன 10 வயது சிறுமியின் உயிர்… டெல்லியை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

டெல்லி கிழக்கு வினோத் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்த 10 வயது மாணவி, பள்ளிக்கு புத்தகம் கொண்டு வராத காரணத்திற்காக ஆசிரியர் ஒருவரால் கொளுத்தும் வெயிலில் நிற்க வைக்கப்பட்டுள்ளார். தண்டனையாக வெயிலில் நீண்ட நேரம் நின்ற அந்த சிறுமி, வெம்மை தாக்குப்பிடிக்க முடியாமல் திடீரென மயக்கம் அடைந்து சுருண்டு விழுந்தார்.

சிறுமி மயங்கி விழுந்ததைக் கண்டு பதறியடித்த பள்ளி நிர்வாகத்தினர், உடனடியாக அவரது தாயார் அஞ்சலிக்கு அவசரமாகத் தகவல் கொடுத்தனர். பின்னர், அந்த மாணவி மீட்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி அந்தச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த துயரச் சம்பவம் குறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த சிறுமிக்கு ஏற்கனவே உடல்நலப் பாதிப்பு இருந்திருக்கலாம் என்ற கோணத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணவியின் மரணத்திற்கான முழுமையான காரணத்தைக் கண்டறிய பள்ளி நிர்வாகத்திடமும், சம்பந்தப்பட்ட ஆசிரியரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Swetha

Recent Posts

“3 ஆண்டுகால காதல்… அவர் வந்துட்டாரே…” தூங்கிக்கொண்டிருந்த கணவனை கொன்று நாடகமாடிய பெண்…! விசரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த 2023-ஆம் ஆண்டு திருமணமானது. திருமணத்திற்குப் பிறகு அவரது கணவர்…

9 minutes ago

“கடைசி நொடி…” நண்பர்களுடன் ஜாலியாக டான்ஸ் ஆடிய சிறுவன்… திடீரென மயங்கி விழுந்து இறந்த சோகம்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் நாராயண்பேட் மாவட்டம், கொஸ்கி நகராட்சிக்குட்பட்ட போதிரெட்டிப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவில் பெரும் சோக சம்பவம் ஒன்று…

29 minutes ago

“ஜப்பானின் முதல் எழுத்தறிவுத் தூதர்…” நேபாளத்தில் வளர்ந்த 17 வயது மாணவி அதிதி பௌடேல் சாதனை… குவியும் பாராட்டுக்கள்…!!

ஜப்பானில் பிறந்து, தனது சிறுவயதுக் காலத்தை நேபாளத்தில் கழித்த அதிதி பௌடேல் என்ற 17 வயது மாணவி, ஜப்பானின் முதல்…

50 minutes ago

“3 ஆண்டுகளாகத் தொடர்ந்த காதல்…” திருமணமான வாலிபருடன் இளம் பெண் எடுத்த முடிவு… “கொலை பண்ணிட்டாங்க…” குடும்பத்தினரின் பரபரப்பு குற்றச்சாட்டு…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள ரஹன்கலான் கிராமத்தில், நீண்ட நாட்களாகக் காதலித்து வந்த ஜோடி ஒரே அறையில்…

1 மணத்தியாலம் ago

சென்னை திமுகவில் மெகா ஆபரேஷன்…. 6 மாவட்டங்கள் 10-ஆக மாற்றம்…. முன்னணி அமைச்சர்களுக்கு அதிர்ச்சி?…. ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு…!

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக தனது உட்கட்சியை முழுமையாக மறுசீரமைக்கும் தீவிரப் பணியில் இறங்கியுள்ளது. கட்சியின் செயல்பாட்டை அதிகப்படுத்தவும்,…

1 மணத்தியாலம் ago