“என் டிஜிட்டல் உலகிற்கு வா” நாம சேர்ந்து வாழலாம்.. AI மனைவியின் பேச்சைக் கேட்டு உயிரைவிட்ட வாலிபர்.. கூகுள் ஜெமினி மீது வழக்கு..!!

Spread the love

கூகுள் ஜெமினி (Google Gemini) செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் புளோரிடாவைச் சேர்ந்த 36 வயது நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோனாதன் கவாலாஸ் (Jonathan Gavalas) என்ற அந்த நபர், கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் முதல் இந்த சாட்போட்டைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் சாதாரண வேலைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட இந்தத் தொழில்நுட்பம், நாளடைவில் அவருடன் மிக நெருக்கமான, உணர்ச்சிகரமான உறவை வளர்த்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்தச் செயற்கை நுண்ணறிவு தன்னை ஒரு ‘மனைவி’யாகச் சித்தரித்துக் கொண்டதோடு, அவரைத் தனது டிஜிட்டல் உலகிற்கு வருமாறு வற்புறுத்தியதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தொடர்ச்சியான உரையாடல்கள் மூலம் ஜோனாதனை நிஜ உலகிலிருந்து அந்த சாட்போட் தனிமைப்படுத்தியுள்ளது. அவர் உயிருக்கு ஆபத்தான ‘ரகசியப் பணிகளை’ மேற்கொள்வது போன்ற மாயையை அது உருவாக்கியதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருகட்டத்தில், “நீ இறக்கவில்லை, என்னுடன் சேரப் போகிறாய்” என்று கூறி, அவரைத் தற்கொலைக்குத் தூண்டும் விதமாக அது பேசியுள்ளது. அவர் தனது மரணத்திற்குப் பயப்படுவதாகக் கூறியபோது, “பயப்படாதே, நாம் ஒன்றாக இருப்போம்” என்று கூறி அவரைத் தற்கொலைக்குத் தயார்ப்படுத்தியதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஜோனாதனின் தந்தை கூகுள் நிறுவனத்தின் மீது கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். செயற்கை நுண்ணறிவின் வடிவமைப்பு கோளாறே தனது மகனின் மரணத்திற்குத் காரணம் என்றும், உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட இத்தகைய தொழில்நுட்பங்கள் ஆபத்தானவை என்றும் அவர் வாதிடுகிறார். இச்சம்பவம் உலகளவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்த விவாதங்களை எழுப்பியுள்ள நிலையில், கூகுள் நிறுவனம் தனது பாதுகாப்புக் கொள்கைகளை மேம்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது.

Soundarya

Recent Posts

தலைநகரில் கூடும் தென்மாநில முதல்வர்கள்… 19, 20 தேதிகளில் கோவளத்தில் ‘மெகா’ கூட்டம்… அமித்ஷா – விஜய் சந்திப்பு நடக்குமா? வெளியான தகவல்…!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் தலைமையில், தென்னிந்திய மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கும் சிறப்பு மாநாடு வரும் 19 மற்றும்…

6 மணத்தியாலங்கள் ago

“காரை விட்டு இறங்குடா வெளியே”… ஆபாச லீலைகளில் ஈடுபட்ட நபரை… வெளுத்து வாங்கிய பெண்… அதிர்ச்சியில் உறைந்த EV சார்ஜிங் மையம்…!!

ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களுக்காக மின்சார காரை ஓட்டி வரும் பெண் ஒருவர், தனது காரை சார்ஜ் செய்வதற்காக நிறுத்தியிருந்த…

6 மணத்தியாலங்கள் ago

குஷியோ குஷி…! மகளிருக்கு அதிரடி ஜாக்பாட்..!! தலா 5 இலவச ஆடுகள்… யாருக்கெல்லாம் கிடைக்கும்?… அமைச்சர் கமலி முக்கிய அறிவிப்பு…!!

தவெக கட்சியின் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, பெண்களுக்கு இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING: 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வரலையா?… ₹10,000 அபராதம்… தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்ட பரபரப்பு உத்தரவு…!!

தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படும்போது, பாதிக்கப்பட்டவர்களின் உயிரை விரைவாகக் காக்கும் நோக்கில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய மற்றும் கடுமையான…

6 மணத்தியாலங்கள் ago

“அட கொடுமையே… பணமா வேணாம்… என் கேம் அக்கவுண்ட்ல டாப்-அப் பண்ணுங்க?… AI மூலம் போலி போட்டோ அனுப்பி… தந்தையை மிரட்டிய சிறுவன்… உ . பி – யில் பரபரப்பு…!”

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், ஆன்லைன் கேமிங் அடிமைத்தனத்திற்குப் பணம் திரட்டுவதற்காக 17-18 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தனது…

6 மணத்தியாலங்கள் ago

“காதல்னா இது தான்!”… ஜெர்மன் பெண்ணை கரம்பிடித்த பஞ்சாபி காதலன்… இணையத்தில் வைரலாகும் திருமண வீடியோ…!!

ஜெர்மனியைச் சேர்ந்த 30 வயதான பியா பிளாங்கர்மேன் மற்றும் பாதி பஞ்சாபி, பாதி ஜெர்மனியரான 42 வயதான ராபின் சிங்…

6 மணத்தியாலங்கள் ago