பிசியோதெரபி பயிற்சிக்குச் சென்ற மாணவி… குளிர்பானத்தில் மயக்க மருந்து… ஹோட்டல் அறையில் அந்தக் காலத்தில் மயங்கி கிடந்த பெண்… இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஷாலினி சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிசியோதெரபிஸ்ட் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் பயிற்சிக்காக பெரம்பூரில் உள்ள பிசியோதெரபிஸ்ட் மருத்துவரான கார்த்திகேயன் (27) என்பவர் நடத்தி வரும் மருத்துவமனையில் கடந்த 17ஆம் தேதி வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கு மாணவிக்கு பயிற்சி அளித்த மருத்துவர் கார்த்திகேயன் பிசியோதெரபிஸ்ட் தேவைப்படும் சிலருக்கு வீடுகளுக்கு சென்று உடற்பயிற்சி செய்ய கற்றுக் கொடுத்து வந்துள்ளார்.

இதனிடையே நேற்று காலை 6 மணி அளவில் இளம்பெண் வேலை செய்யும் மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் கார்த்திகேயன் ஷாலினிக்கு போன் செய்து ஒரு மணி அளவில் சில வீடுகளுக்கு சென்று பிசியோதெரபிஸ்ட் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். அதன்படி இளம் பெண் நேற்று 11 மணியளவில் வீட்டிலிருந்து கிளம்பிய நிலையில் இரண்டு வீடுகளுக்கு சென்று பிசியோதெரபி செய்தார். பின்னர் ஒரு பெண்ணுக்கு பிசியோதெரபிஸ்ட் செய்ய வேண்டும் என்று கூறி ஷாலினியை அவருடைய காரில் ஏற்றி சென்றுள்ளனர்.

அப்போது காரில் இருந்த குளிர்பானத்தை எடுத்து கார்த்திகேயன் ஷாலினியிடம் குடிக்க வைத்துள்ளார். மருத்துவர் தானே என நம்பி குடித்த ஷாலினி சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். இதனை தொடர்ந்து கார்த்திகேயன் ஷாலினியை கொளத்தூர் ஜெயந்தி நகர் 2வது மெயின் ரோட்டில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். பிறகு மயக்கத்தில் இருந்து விழித்த அந்தப் பெண் தனது நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பிறகு எழுந்து தன்னுடைய உடைகளை சரி செய்து கொண்டு அந்த இடத்திலிருந்து வெளியே வந்து தனது அக்காவுக்கு போன் செய்து நடந்ததை கூறினார்.

இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த இளம் பெண்ணின் உறவினர்கள் உடனே போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

9 minutes ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

15 minutes ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

24 minutes ago

‘ஒரு நிமிஷம் லேட்டானாலும் விடமாட்டோம்’ ஊழியர்களின் ரத்தத்தை உறிஞ்சும் கார்ப்பரேட் நிறுவனம்… நெட்டிசன்களை அதிரவைத்த ஆபீஸ் ரூல்ஸ்..!!

சமூக வலைத்தளமான X தளத்தில் அலுவலகம் ஒன்றின் விசித்திரமான அறிவிப்பு ஒன்று வெளியாகி, தற்பொழுது பெரும் வைரலாகி வருகிறது. அந்த…

46 minutes ago

“நெருங்கிய மரணம்… அந்தரத்தில் ஊசலாடிய உயிர்…! சீனாவின் 200 அடி உயரப் பேராபத்தில் நடந்தது என்ன…?”

சீனாவின் நான்செங் நகரில் வானில் பாராகிளைடிங் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென வீசிய பலத்த காற்றினால் தனது கட்டுப்பாட்டை இழந்தார்.…

57 minutes ago

பதவி விலகும் செல்வபெருந்தகை… திமுக – தவெக கூட்டணியால் காங்கிரஸில் வெடித்ததா பூகம்பம்…?! அதிரடி பின்னணி…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வபெருந்தகை, தனது பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து அகில இந்திய காங்கிரஸ்…

1 மணத்தியாலம் ago