பிரபல ஊடகவியலாளரும் ரெட் பிக்ஸ் (RedPix) யூடியூப் சேனலின் உரிமையாளருமான பெலிக்ஸ் ஜெரால்ட், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே தவெக கட்சிக்கும் அதன் கொள்கைகளுக்கும் ஆதரவாகக் குரல் கொடுத்து வந்த பெலிக்ஸ் ஜெரால்ட், இன்று முறைப்படி கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
முன்னதாக, செப்டம்பர் 2025-இல் கரூரில் நடைபெற்ற தவெக மாநாட்டின் போது ஏற்பட்ட நெரிசல் குறித்துத் தவறான தகவல்களைப் பரப்பியதாகக் கூறி தமிழக காவல்துறையினரால் இவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அக்டோபர் மாதம் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சமீபகாலமாகத் தமிழக அரசு மற்றும் திமுக-வுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த இவர், தற்போது தவெக-வில் இணைந்துள்ளது 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது
இந்நிலையில் கட்சியில் இணைந்த உடனேயே அவருக்கு தேசிய பத்திரிக்கை செய்தி தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளில் முழு வீச்சியில் ஈடுபடுமாறு அவருக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
மலேசியாவில் டாக்ஸியில் பயணம் செய்த பெண் ஒருவர், ஓட்டுநரின் விசித்திரமான மற்றும் அச்சுறுத்தும் நடத்தையால் பயந்து, ஓடிக்கொண்டிருந்த காரில் இருந்து…
சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலான ஒரு வீடியோவில், புடவை அணிந்த பெண் ஒருவர் சிங்கங்கள் உலவும் பகுதிக்கு மிக அருகில்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவராக விஜய் பொறுப்பேற்கும் பதவியேற்பு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது. இந்த வரலாற்றுச்…
தமிழக அரசியல் வரலாற்றில் இன்று ஒரு முக்கிய மைல்கல்லாக அமையப் போகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு முதியவர் திருமண விழா ஒன்றில் மிகவும் சிரமப்பட்டு வேலை…
அமெரிக்காவிற்குச் சுற்றுலா சென்ற இந்திய இன்ஃப்ளூயன்ஸர் ஒருவர், அங்குள்ள அதிகப்படியான வாழ்க்கைச் செலவுகள் குறித்துப் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில்…