அடுத்த அதிரடி… விஜய் கட்சியில் இணைந்த உடனே முக்கிய பொறுப்பு… செங்கோட்டையனையே ஓவர்டேக் செய்த பிரபலம்… சற்றுமுன் அறிவிப்பு..!

By Nanthini on மார்கழி 21, 2025

Spread the love

பிரபல ஊடகவியலாளரும் ரெட் பிக்ஸ் (RedPix) யூடியூப் சேனலின் உரிமையாளருமான பெலிக்ஸ் ஜெரால்ட், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே தவெக கட்சிக்கும் அதன் கொள்கைகளுக்கும் ஆதரவாகக் குரல் கொடுத்து வந்த பெலிக்ஸ் ஜெரால்ட், இன்று முறைப்படி கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

முன்னதாக, செப்டம்பர் 2025-இல் கரூரில் நடைபெற்ற தவெக மாநாட்டின் போது ஏற்பட்ட நெரிசல் குறித்துத் தவறான தகவல்களைப் பரப்பியதாகக் கூறி தமிழக காவல்துறையினரால் இவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அக்டோபர் மாதம் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சமீபகாலமாகத் தமிழக அரசு மற்றும் திமுக-வுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த இவர், தற்போது தவெக-வில் இணைந்துள்ளது 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது

   

இந்நிலையில் கட்சியில்  இணைந்த உடனேயே அவருக்கு தேசிய பத்திரிக்கை செய்தி தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளில் முழு வீச்சியில் ஈடுபடுமாறு அவருக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளார்.