காற்றடித்ததால் துண்டிக்கப்பட்ட மின்சாரம்…! தொழிலாளி மீது பழி போட்டு ரூ.94,000 அபராதம் விதித்த அதிகாரிகள்…. மூதாட்டியுடன் போராடும் குடும்பம்….!!

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் போங்காலை பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த மே மாதம் பலத்த காற்று வீசியதால் அப்பகுதியில் உள்ள ரப்பர் மரம் முறிந்து விழுந்தது. இதனால் சுந்தர்ராஜன் வீட்டில் உள்ள மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. உடனே மின்வாரிய அலுவலகத்தில் இருந்து வந்த தற்காலிக தொழிலாளி மீட்டரில் பொருத்தாமல் தற்காலிகமாக மின் இணைப்பை சீரமைத்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து மின்வாரிய ஊழியர்களிடம் கேட்டபோது, ஒரு சில நாட்களில் மீண்டும் வந்து மீட்டரில் பொருத்தி மின் இணைப்பு வழங்குவதாக கூறி சென்றுள்ளனர். முதற்கட்டமாக தொழிலாளிக்கு 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த பணத்தை செலுத்தி விட்டார். சமீபத்தில் மின்வாரிய சிறப்பு அதிகாரிகள் சோதனைக்கு வந்து கூலி தொழிலாளி மின்சாரம் திருடியதாக கூறி 94 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு மின் இணைப்பையும் துண்டித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சுந்தர்ராஜ் மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்து சம்பந்தப்பட்ட தற்காலிக ஊழியரை அடையாளம் காட்டிக் கொடுத்தார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சுமார் 24 நாட்களாக மின் இணைப்பு இல்லாமல் அவரது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.

அவர்களது வீட்டில் தங்கி இருக்கும் மூதாட்டி மின்சாரம் இல்லாததால் வீட்டிற்குள்ளேயே பலமுறை தவறி விழுந்து காயமடைந்தார். இதனால் கண் பார்வை இழந்த 87 வயது மூதாட்டி உட்பட சுந்தரராஜனின் குடும்பத்தினர் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

மிருகத்தனத்தின் உச்சம்!.. சொந்த மகளையே மனைவியாக்கி.. பேத்தியையும் கர்ப்பமாக்கிய 50 வயது நபர்… நீதிமன்றத்தையே அதிரவைத்த வாக்குமூலம்..!!

பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளின் ஆழத்தில் அமைந்துள்ள தபவுவாவுக்கு அருகிலுள்ள பக்கூரி பழங்குடி சமூகத்தில், உலகையே அதிர வைக்கும் ஒரு கொடூரமான…

1 minute ago

ஆபாசப் படம் பார்த்த 14 வயது சிறுவன்.. நள்ளிரவில் 91 வயது பாட்டிக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர வைக்கும் வாக்குமூலம்..!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், நள்ளிரவில் தனது சொந்த வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 91 வயது மூதாட்டி ஒருவர், 14 வயது…

11 minutes ago

அப்போ நடிகர்.. இப்போ முதல்வர்.. மாணவர்களே ரெடியா? முதலமைச்சரான பிறகு CM நடத்தும் முதல் கல்வி விருது விழா தேதி குறித்த தகவல்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான விஜய், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த…

13 minutes ago

BREAKING: விஜய் அரசுக்கு ஆதரவு வாபஸ்.. EPS-உடன் இணைந்த 3 MLA-க்கள்… அடுத்த பரபரப்பு…!!

தவெக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்று, எடப்பாடி பழனிசாமி (EPS) தலைமையிலான அணியில் அடுத்தடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள்…

16 minutes ago

பெற்ற மகளையே மனைவியாக்கிய தந்தை.. பிறந்த குழந்தையோடு சேர்த்து 3 பேரைக் கொன்றுவிட்டுத் தற்கொலை.. அமெரிக்காவில் நடந்த பகீர் சம்பவம்..!!

அமெரிக்காவில் அரங்கேறிய முறையற்ற உறவு விவகாரத்தில், ஸ்டீவன் பிளாட்ல் (Steven Pladl) என்ற நபர் கடந்த 2018-ம் ஆண்டில் தனது…

26 minutes ago

மாணவனுக்குப் போதைப்பொருள் கொடுத்து 12 முறை பாலியல் அத்துமீறல்.. பெற்றோர் வீட்டில் அரங்கேறிய கொடூரம்.. ஆசிரியை விவகாரத்தில் மாணவன் கொடுத்த பகீர் வாக்குமூலம்..!!

போதைப்பொருள் உட்கொண்டிருந்த நிலையில், தன் மாணவருடன் பலமுறை பாலியல் உறவு கொண்டதை ஒப்புக்கொண்ட அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள்…

35 minutes ago