“நல்லாத்தானே இருந்தா…” ஆசையாக மகளை அழைத்து வந்த தந்தை…! மறுநாளே நடந்த பேரதிர்ச்சி சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

Spread the love

சென்னை மாவட்டம் வடபழனி மன்னார் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். ஈரோட்டை சேர்ந்த மகேந்திரன் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக கடந்த ஒரு மாதமாக வடவள்ளியில் வாடகை வீட்டில் தங்கி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரது 6 வயது மகள் சஞ்சனா ஸ்ரீக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிறந்தநாள். இதனால் மகேந்திரன் ஈரோட்டில் இருந்து குழந்தையை அழைத்து வந்து தன்னுடன் தங்க வைத்தார்.

அப்போது மகளுக்கு காய்ச்சல் இருந்ததால் நேற்று முன்தினம் இரவு மருந்து கொடுத்து தூங்க வைத்தார். மறுநாள் காலை மகளை எழுப்பிய போது எந்தவித அசைவும் இல்லை. ஆனால் வாய் மூக்கில் இருந்து ரத்தம் கசிந்ததால் அதிர்ச்சடைந்த மகேந்திரன் தனது மகளை தூக்கிக்கொண்டு தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு அவரை பரிசோதனை செய்து டாக்டர்கள் சஞ்சனா ஸ்ரீ ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஆஸ்பிரேஷன் நிமோனியா என்ற நுரையீரல் தொற்று பாதிப்பு காரணமாக சிறுமி இறந்ததாக கூறப்படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் சிறுமி இறந்ததற்கான முழு காரணம் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

Devi Ramu

Recent Posts

FLASH NEWS: தமிழகத்தை உலுக்கிய விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு… இரட்டை தூக்கு தண்டனை… தர்ம முனீஸ்வரனுக்கு நீதிமன்றம் விதித்த இறுதி தீர்ப்பு…!

விளாத்திக்குளத்தில் பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம்…

4 minutes ago

சற்றுமுன் அதிர்ச்சி… பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய ஆயில் ஃபேக்டரி…. சென்னையை உலுக்கிய பரபரப்பு காட்சி…!

சென்னை மணலி அருகே உள்ள ஒரு தனியார் எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டு பெரும்…

8 minutes ago

கோவையில் அடுத்த அதிர்ச்சி… அன்னூரில் நடுரோட்டில் நடந்த சைக்கோத்தனம்… திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடிக்கு நேர்ந்த பயங்கரம்…!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள் கட்டுக்குள் வரவில்லை என்ற குற்றச்சாட்டு…

14 minutes ago

#BREAKING: “தலைகீழாக மாறிய தமிழக அரசியல்”… ஆற்காடு சுகுமாரை தொடர்ந்து முகாம் மாறினார் பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ. மோகன்…!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மூத்த தலைவர்களான எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் தலைமையில் 25 எம்.எல்.ஏக்கள்…

22 minutes ago

“என் புருஷன் விஷம் குடிச்சிட்டார்!” – கணவனின் இறந்த உடலுக்கு அருகே கள்ளகாதலனோடு விருந்து சாப்பிட்டு கொண்டாடிய மனைவி…. இறுதியில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவி மற்றும் அவரது தங்கை தங்களது காதலர்களுடன்…

35 minutes ago