உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவி மற்றும் அவரது தங்கை தங்களது காதலர்களுடன் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொராதாபாத் பகுதியைச் சேர்ந்த பவன் குமார் தாக்கூர் (30) என்ற இளைஞரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவருக்கும் சம்பல் பகுதியைச் சேர்ந்த ஆஞ்சல் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. பவனின் அத்தை மகன் அங்கித் என்பவருடன் ஆஞ்சலுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த பவன், குடும்பத்தில் சண்டையைத் தவிர்க்க கிராமத்தை விட்டு வெளியேறி குண்டன்பூர் பகுதியில் குடியேறியுள்ளார். ஆனாலும், ஆஞ்சல் தனது கள்ள உறவைத் தொடர்ந்து வந்துள்ளார். இதற்கிடையில், ஆஞ்சலின் சகோதரி ஷிகாவும் அஜய் திவாகர் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். தங்களது காதலுக்குப் பவன் தடையாக இருப்பதாகக் கருதிய இரு சகோதரிகளும், அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டம் தீட்டினர்.
திட்டமிட்டபடி கடந்த வெள்ளிக்கிழமை மாலை பவன் வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பியதும், ஆஞ்சல் அவரிடம் வேண்டுமென்றே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சண்டை முற்றிய நிலையில், ஆஞ்சலும் அவரது சகோதரி ஷிகாவும் சேர்ந்து பவனைக் கயிற்றால் கட்டிப் போட்டனர். பின்னர், தங்களது காதலர்களான அங்கித் மற்றும் அஜய் திவாகரை வீட்டிற்கு வரவழைத்துள்ளனர். அங்கு வந்த காதலர்களுடன் இணைந்து, நான்கு பேரும் சேர்ந்து பவனுக்கு கொடூரமான முறையில் மின் அதிர்ச்சி (கரண்ட் ஷாக்) கொடுத்துள்ளனர். அதோடு நிறுத்தாமல், பவனின் வாயில் வலுக்கட்டாயமாக விஷத்தையும் ஊற்றியுள்ளனர். இந்தத் கொடூரத் தாக்குதலால் பவன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வேளையில், குற்றவாளிகள் நால்வரும் சிறிதும் இரக்கமின்றி அதே வீட்டில் அமர்ந்து மகிழ்ச்சியாக மது மற்றும் உணவுடன் விருந்து கொண்டாடியது காவல்துறை விசாரணையில் வெளிவந்து நெஞ்சைப் பதறவைத்துள்ளது.
இதற்கிடையில், இந்தத் கொடூரக் கொலையைத் தற்கொலையாக மாற்ற ஆஞ்சல் ஒரு நாடகமாடியுள்ளார். பவனின் சகோதரிகளைத் தொடர்புகொண்ட ஆஞ்சல், பவன் ஏதோ விஷம் குடித்துவிட்டதாகக் கூறிப் பதறியுள்ளார். பதறிப்போன உறவினர்கள் உடனடியாக பவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு பவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பவனின் மரணத்தில் சந்தேகம் வராமல் இருக்க, அவரது உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ய ஆஞ்சல் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆஞ்சலின் இந்த அதீத எதிர்ப்பே காவல்துறையினருக்கு அவர் மீது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் பவனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். சனிக்கிழமை மாலை வெளியான பிரேதப் பரிசோதனை அறிக்கையில், பவனின் உடலில் மின் அதிர்ச்சி கொடுத்ததற்கான தழும்புகளும், உடலில் விஷம் கலந்திருந்ததும் திட்டவட்டமாக உறுதி செய்யப்பட்டது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் காவல்துறையினர் ஆஞ்சலிடம் தங்களது பாணியில் தீவிர விசாரணை நடத்தியபோது, அவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். உடனடியாகச் செயல்பட்ட காவல்துறையினர், கொலைக் குற்றவாளிகளான மனைவி ஆஞ்சல், அவரது சகோதரி ஷிகா மற்றும் அவர்களது காதலர்களான அங்கித், அஜய் திவாகர் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் அரங்கேறிய முறையற்ற உறவு விவகாரத்தில், ஸ்டீவன் பிளாட்ல் (Steven Pladl) என்ற நபர் கடந்த 2018-ம் ஆண்டில் தனது…
போதைப்பொருள் உட்கொண்டிருந்த நிலையில், தன் மாணவருடன் பலமுறை பாலியல் உறவு கொண்டதை ஒப்புக்கொண்ட அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள்…
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்த ராஜகோபால், தன்னிடம் புகார் அளிக்க வந்த பெண்ணிற்கு…
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து வழக்கம்போல ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும்,…
விளாத்திக்குளத்தில் பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம்…
சென்னை மணலி அருகே உள்ள ஒரு தனியார் எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டு பெரும்…