தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து வழக்கம்போல ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், தற்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் கடுமையான வெயில் மற்றும் வெப்ப அலையின் காரணமாக, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பதை தள்ளிவைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், ஜூன் முதல் வாரத்தில் வெப்ப அலையின் தாக்கம் எவ்வாறு இருக்கும் அல்லது பருவமழை தொடங்குமா என்பது குறித்தான விரிவான அறிக்கையை வழங்குமாறு வானிலை ஆய்வு மையத்திடம் கோரியுள்ளதாகத் தெரிவித்தார். வானிலை முன்னறிவிப்பு விவரங்கள் கிடைக்கப்பெற்றவுடன், அது குறித்து முதலமைச்சர் விஜய்யுடன் கலந்தாலோசனை நடத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சருடனான அந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகே, தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் அதிகாரப்பூர்வ தேதி குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்று அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போது மாணவர்களுக்கான காலை உணவு மற்றும் மதிய உணவுத் திட்டங்கள் எவ்வித தடையுமின்றி வழக்கம்போல தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பமாக, அதிமுகவைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர்.…
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 10…
தமிழக அமைச்சர்களின் தனிப்பட்ட அலுவலகங்களில் உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், வாகன ஓட்டுநர்கள் மற்றும் பாதுகாப்புப் போலீசார் என 400-க்கும் மேற்பட்ட…
ஒடிசா மாநில ராஜ்யசபா எம்.பி.யான தேபாசிஷ் சமந்த்ரே, பிஜு ஜனதா தளம் (BJD) கட்சியில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார். கட்சியில்…
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி…
தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பிளவு, இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு (EPS) அரசியல் ரீதியாக ஒரு…