குஜராத் மாநிலம் நவாபுரா பகுதியில் வாரிசு வேண்டி 40 வயது பெண் ஒருவரை, அவரது மாமனார் மற்றும் நாத்தனாரின் கணவர் ஆகிய இருவர் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சிக்குரிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து நவாபுரா காவல் நிலையத்தில் தனது மாமனார், நாத்தனார் கணவர் மற்றும் சொந்த கணவர் ஆகியோருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளார். தனக்கு நேர்ந்த கொடூரத்தை வெளியில் சொன்னால், அந்தரங்கப் படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவதாகக் கணவரே மிரட்டியதாக அப்பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தின்படி, அவருக்கும் அவரது கணவருக்கும் கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு அப்பெண்ணின் வயது காரணமாக அவர் கருத்தரிப்பதில் தாமதம் ஏற்படலாம் என்று புகுந்த வீட்டினர் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தம்பதியினர் மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டபோது, கணவருக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவர்கள் செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சையை மேற்கொண்ட போதிலும் அது தோல்வியில் முடிந்தது. இதன் பின்னர் குழந்தையைத் தத்தெடுக்கலாம் என்ற மனைவியின் கோரிக்கையை புகுந்த வீட்டினர் முற்றிலுமாக நிராகரித்துள்ளனர்.
இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, கடந்த 2024 ஜூலை மாதம் அப்பெண் தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது மாமனார் உள்ளே புகுந்து அவரைப் பலவந்தமாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அப்பெண் தனது கணவரிடம் அழுது முறையிட்டபோது, கணவன் காட்டிய இரக்கமற்ற குணம் அவரை உலுக்கியுள்ளது. “எனக்கு ஒரு குழந்தை வேண்டும், அதனால் இந்த விஷயத்தை வெளியில் சொல்லக் கூடாது” என்று கூறிய கணவர், மீறி யாரிடமாவது கூறினால் மனைவியின் நிர்வாணப் படங்களை பொதுவெளியில் பரப்பிவிடுவதாக மிரட்டியுள்ளார். கணவனின் ஆதரவு இல்லாததால், மாமனாரின் தொடர் பாலியல் அத்துமீறல்களுக்கு அப்பெண் ஆளாகியுள்ளார்.
மாமனாரால் கர்ப்பம் தரிக்காத நிலையில், கடந்த 2024 டிசம்பர் மாதம் அப்பெண்ணின் நாத்தனார் கணவரும் (மைத்துனர்) அவரைப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன் விளைவாக, ஜூன் மாதம் அப்பெண் கர்ப்பமடைந்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக அடுத்த மாதமே (ஜூலை) அவருக்குக் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. இந்தத் தொடர் மன உளைச்சலுக்கும் கொடுமைக்கும் ஆளான அப்பெண், இறுதியாக ஜூலை மாத இறுதியில் தைரியமாக காவல்துறையை அணுகிப் புகார் அளித்துள்ளார். இந்த மனிதாபிமானமற்ற கொடூரச் சம்பவம் குறித்து நவாபுரா போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் அரங்கேறிய முறையற்ற உறவு விவகாரத்தில், ஸ்டீவன் பிளாட்ல் (Steven Pladl) என்ற நபர் கடந்த 2018-ம் ஆண்டில் தனது…
போதைப்பொருள் உட்கொண்டிருந்த நிலையில், தன் மாணவருடன் பலமுறை பாலியல் உறவு கொண்டதை ஒப்புக்கொண்ட அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள்…
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்த ராஜகோபால், தன்னிடம் புகார் அளிக்க வந்த பெண்ணிற்கு…
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து வழக்கம்போல ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும்,…
விளாத்திக்குளத்தில் பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம்…
சென்னை மணலி அருகே உள்ள ஒரு தனியார் எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டு பெரும்…