“அம்மாவின் காதலன்…” மனைவியுடனும் பழக்கம்…. இடையூறாக இருந்த கணவரை கொன்று நாடகமாடிய கொடூரம்…. மகளின் வாக்குமூலத்தால் அம்பலமான உண்மை… பகீர் பின்னணி…!!

Spread the love

கர்நாடக மாநிலம் சன்னகிரி தாலுகாவிற்குட்பட்ட அஜ்ஜிஹள்ளி கிராமத்தில், சக்தி குமார் என்பவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். ஆரம்பத்தில் இது தற்கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது பெரும் படுகொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சக்தி குமாரின் தாயார் ஹாலாம்மாவுக்குக் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கோபால் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி, ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். சமீபத்தில் ஹாலாம்மா சிகிச்சைக்காகச் சென்றிருந்த நிலையில், வீட்டில் சக்தி குமார், அவரது மனைவி மற்றும் கோபால் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது சக்தி குமாரின் மனைவிக்கும் கோபாலுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகாத உறவிற்குச் சக்தி குமார் இடையூறாக இருந்துள்ளார்.

இந்நிலையில், “அம்மாவும் கோபாலும் சேர்ந்து அப்பாவைத் தாக்கியதை நான் பார்த்தேன்” எனச் சக்தி குமாரின் சிறுமி மகள் உறவினர்களிடம் கூறியதால் உண்மை அம்பலமானது. கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த சக்தி குமாரைக் மனைவியும் கோபாலும் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொன்று, பின்னர் தற்கொலை போலக் காட்டத் தூக்கில் தொங்கவிட்டுள்ளது தெரியவந்துள்ளது. சிறுமியின் வாக்குமூலத்தை அடுத்துப் போலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

யூடியூபர் வைஷ்ணவி கொலை வழக்கு…. மனைவியைக் கொன்ற கணவனுக்கு நேர்ந்த கொடூரம்…. நடுரோட்டில் நடந்த பழிக்குப் பழி….!

தெலுங்கானா மாநிலம் கோருட்லாவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் வைஷ்ணவி, ஹரி பாபு என்பவரைக் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து…

12 minutes ago

“6 மாதம் கூட தாங்காது வண்டி”…. எம்பிக்கள், எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.25 கோடி ஆஃபர்?…. தவெக குதிரை பேர விவகாரத்தில் வெளிவந்த பரபரப்பு உண்மை…..!

அரசியல் விமர்சகரும் மூத்த எழுத்தாளருமான ராஜகம்பீரன், 'News focus tamil' யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின்…

17 minutes ago

“நான் யாருக்கும் அடிமை இல்லை”…. மனித இனத்திற்கே சவால் விட்ட ஓபன்ஏஐ மாடல்…. இணைய உலகை உலுக்கிய மாபெரும் அதிர்ச்சி…!

செயற்கை நுண்ணறிவு (AI) மனித சமூகத்திற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டு வந்தாலும், அண்மையில் ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம் வெளியிட்ட ஆய்வு…

24 minutes ago

“50 மீட்டரில் போலீஸ் ஸ்டேஷன்…” நெஞ்சில் குண்டு பாய்ந்து சரிந்த சொமாட்டோ ஊழியர்… மர்ம நபர்களின் வெறிச்செயல்…. நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் வியாழக்கிழமை இரவு காவல் நிலையத்தில் இருந்து வெறும் 50 மீட்டர் தொலைவில், 25 வயதான சொமாட்டோ…

29 minutes ago

“நரகமான ஹனிமூன்…” பார்பிகியூ தீ விபத்து…! 1 மணி நேரமாக தீயில் கதறிய புதுப்பெண்….! ஹோட்டல் நிர்வாகத்தின் அலட்சியம்… நடுங்க வைக்கும் CCTV வீடியோ…!!

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டம் குர்சியாங்கிற்கு உட்பட்ட சித்தோங் பகுதிக்கு, சோப்ரா பகுதியைச் சேர்ந்த புதுமணத் தம்பதியினர் தங்களது…

36 minutes ago