மும்பை ஜோகேஷ்வரி ரயில் நிலையத்தில் செப்டம்பர் 16 அன்று நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவலர் நாகேஷ் மோஹிதே, ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற பயணி ஒருவரைப் பார்த்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாகத் தனது கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பயணி, நகரும் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே உள்ள ஆபத்தான இடைவெளியில் தவறி விழப் பார்த்தார். நொடிப் பொழுதில் அசம்பாவிதம் நேரவிருந்ததை உணர்ந்த காவலர் நாகேஷ் மோஹிதே, மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்று அந்தப் பயணியைப் பிடித்துப் பின்னோக்கி இழுத்துப் பத்திரமாகக் காப்பாற்றினார்.
இந்தச் சம்பவம் முழுவதும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகிச் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உயிரைப் பணயம் வைத்துப் பயணியின் உயிரைக் காப்பாற்றிய காவலர் நாகேஷ் மோஹிதேவின் சாதுரியமான செயலை ரயில்வே அதிகாரிகளும் பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் கோருட்லாவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் வைஷ்ணவி, ஹரி பாபு என்பவரைக் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து…
அரசியல் விமர்சகரும் மூத்த எழுத்தாளருமான ராஜகம்பீரன், 'News focus tamil' யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின்…
செயற்கை நுண்ணறிவு (AI) மனித சமூகத்திற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டு வந்தாலும், அண்மையில் ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம் வெளியிட்ட ஆய்வு…
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் வியாழக்கிழமை இரவு காவல் நிலையத்தில் இருந்து வெறும் 50 மீட்டர் தொலைவில், 25 வயதான சொமாட்டோ…
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டம் குர்சியாங்கிற்கு உட்பட்ட சித்தோங் பகுதிக்கு, சோப்ரா பகுதியைச் சேர்ந்த புதுமணத் தம்பதியினர் தங்களது…
ரயிலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், பயணத்தின் போது 3 பேர் மட்டுமே…