“அம்மா எந்திரிம்மா”…. தாயின் ரத்த வெள்ளத்தில் ஒன்றரை வயது குழந்தை… வயல்வெளியில் கதறிய பிஞ்சு… நெஞ்சை பிழியும் சோக சம்பவம்….!

Spread the love

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் அருகே 25 வயது பெண் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.ஹெச். முகாம் பகுதியில் உள்ள வயல்வெளியில் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சினேகா என்ற அந்தப் பெண்ணின் அருகே, அவரது ஒன்றரை வயது பெண் குழந்தை தாயைப் பற்றிக்கொண்டு கதறி அழுதுகொண்டிருந்த காட்சி அப்பகுதி மக்களைக் கண்கலங்கச் செய்துள்ளது.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து உடனடியாக விரைந்து வந்த சிந்தனூர் ஊரகக் காவல் துறையினர், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சினேகாவை மீட்டு சிந்தனூர் தாலுகா அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இருப்பினும், தீவிரக் காயங்கள் காரணமாக அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு காவல் துறையினர் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், சினேகாவிற்கும் அமித் என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு குழந்தை இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களாகச் சினேகாவிற்கு ஷுபம் என்பவருடன் திருமணத்திற்குப் புறம்பான உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த உறவு தொடர்பாக ஏற்பட்ட தகராறு அல்லது மோதலே இந்த கொடூரக் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இக்கொடூர சம்பவம் தொடர்பாகச் சினேகாவின் கணவர் அமித் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் ஷுபம் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சினேகா எந்தச் சூழ்நிலையில் தாக்கப்பட்டார், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட பொருள் என்ன மற்றும் சம்பவ இடத்திற்கு குழந்தை எப்படி வந்தது என்பது குறித்துத் தடயங்களைச் சேகரித்து வரும் போலீசார், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே கொலையின் முழு பின்னணியும் தெளிவாகும் எனத் தெரிவித்துள்ளனர்.

Nanthini

Recent Posts

“பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு…” ஷோரூம் வாசலில் வைத்தே மது குடித்துவிட்டு உள்ளே புகுந்த கும்பல்… பயங்கர தாக்குதல்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…

2 மணத்தியாலங்கள் ago

20 வருட திருமண வாழ்க்கை….! 9 துண்டுகளாக வெட்டப்பட்டு கார் பேக்கில் வீசப்பட்ட இந்தியர்…! மாயமான மனைவி, மகன்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…

2 மணத்தியாலங்கள் ago

“பேனா வாங்க சென்ற 11 வயது சிறுமி…” கை, கால்களை கட்டிப்போட்டு சீரழித்த 56 வயது முதியவர்… பெற்றோரிடம் கதறிய மகள்… இரவில் நடந்த பகீர் சம்பவம்…!!

டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…

3 மணத்தியாலங்கள் ago

“நாங்க போலீஸ்…” கோவிலுக்கு சென்ற  17 வயது சிறுமி… மிரட்டிய சீரழித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…

3 மணத்தியாலங்கள் ago

“எரிந்துகொண்டிருந்த பிணச் சிதையில் இறைச்சி சமையல்…” உறைந்து போன மகன்… சுடுகாட்டில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…

3 மணத்தியாலங்கள் ago

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

3 மணத்தியாலங்கள் ago