“எங்களை விட்டுடுங்க”… காலில் விழுந்து கெஞ்சிய இளம் ஜோடி…. சிறுவனை மிரட்டிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை… நெஞ்சை பதற வைக்கும் காட்சி…!

Spread the love

பீகார் மாநிலத்தில் மாலை நேரப் பயிற்சிகளை முடித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த சிறுவன் மற்றும் சிறுமியை, முகமூடி அணிந்த கும்பல் ஒன்று சூழ்ந்து கொண்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட அதிர்ச்சிச் சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜமுய் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 19 அன்று நடைபெற்ற இந்த அராஜகச் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகின்றன.

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், இருவரையும் பல ஆண்கள் சூழ்ந்து கொண்டு அச்சுறுத்துவதும், ஒருவன் சிறுமியைப் பலவந்தமாகத் தூக்கிச் சென்று பாலியல் தொல்லை கொடுக்க முயல்வதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அச்சிறுமி அதிலிருந்து தப்பிக்கப் போராடிய நிலையில், இருவரும் அக்கும்பலிடம் கெஞ்சி மன்றாடி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த வீடியோ காட்சி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிகள் மீது பீகார் காவல்துறை உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக வலைத்தளப் பயனர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள ஜமுய் மாவட்டக் காவல்துறை, விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவன் மற்றும் சிறுமியைக் கண்டறிந்த காவல்துறை அதிகாரிகள், அவர்களிடம் வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர். மேலும், இந்த அராஜகத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

“பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு…” ஷோரூம் வாசலில் வைத்தே மது குடித்துவிட்டு உள்ளே புகுந்த கும்பல்… பயங்கர தாக்குதல்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…

27 minutes ago

20 வருட திருமண வாழ்க்கை….! 9 துண்டுகளாக வெட்டப்பட்டு கார் பேக்கில் வீசப்பட்ட இந்தியர்…! மாயமான மனைவி, மகன்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…

42 minutes ago

“நாங்க போலீஸ்…” கோவிலுக்கு சென்ற  17 வயது சிறுமி… மிரட்டிய சீரழித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…

1 மணத்தியாலம் ago

“எரிந்துகொண்டிருந்த பிணச் சிதையில் இறைச்சி சமையல்…” உறைந்து போன மகன்… சுடுகாட்டில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…

1 மணத்தியாலம் ago

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

2 மணத்தியாலங்கள் ago