3 மாத குழந்தையை தவிக்கவிட்டு ஓட்டம்… கணவன் போட்ட 4 ஆண்டு ‘ஸ்கெட்ச்’… பஸ்ஸுக்குள் புகுந்து ரத்த வெறி தாக்குதல்…. குலை நடுங்க வைக்கும் பயங்கர சம்பவம் …!

Spread the love

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே ஓடும் அரசு பேருந்தில் இளைஞர் ஒருவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையிலிருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற அரசு பேருந்து கொளமஞ்சனூர் பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகே நிறுத்தப்பட்டபோது, பேருந்தில் பயணித்த ஆனானந்தல் கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கர் என்பவரை மர்ம நபர்கள் திடீரென அரிவாளால் தாக்கியுள்ளனர். பயணிகள் அலறியடித்து ஓடிய நிலையில், படுகாயமடைந்த சிவசங்கர் உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சைப் பிரிவில் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த தண்டராம்பட்டு காவல் ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் செல்போன் சமிக்ஞைகளை (Signal) ஆய்வு செய்ததில், தாக்குதலுக்குப் பின்னால் இருந்த அதிர்ச்சி பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது. சிவசங்கருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரேகா என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரேகா தனது மூன்று மாதக் குழந்தையை விட்டுவிட்டு சிவசங்கருடன் ஓடிச் சென்று, திருப்பூரில் தங்கி வாழ்ந்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட கடுமையான ஆத்திரமும் முன்விரோதமுமே இந்தத் தாக்குதலுக்கு முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது.

சிவசங்கர் வழக்கு ஒன்றின் நிமித்தமாகத் திருவண்ணாமலை நீதிமன்றத்திற்கு வந்துவிட்டு மீண்டும் திருப்பூருக்குப் பேருந்தில் திரும்பியதை அறிந்த ரேகாவின் கணவர் ரகு, தன் நண்பர்களுடன் சேர்ந்து அவரைப் பின்தொடர்ந்துள்ளார். பேருந்தில் ஏறிய ரகுவின் கூட்டாளிகள் இருவர் சிவசங்கரை நோட்டமிட்டு வந்துள்ளனர். ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்துத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில், கோவில் அருகே பேருந்து எதிர்பாராதவிதமாக நின்றதால் அங்கே தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பியோடியதாகக் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இந்தத் துரித நடவடிக்கையின் மூலம் அண்டம்பள்ளத்தைச் சேர்ந்த ரகு, சந்தோஷ், ஆசைத்தம்பி, மாதவன் மற்றும் சுகுமார் ஆகிய 5 பேரை தண்டராம்பட்டு போலீசார் கைது செய்தனர். பழிவாங்கும் நோக்கத்தோடு அரசு பேருந்திற்குள்ளேயே புகுந்து நடத்தப்பட்ட இந்தத் தொடர் தாக்குதல் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் உறைச்சலையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

நடுங்க வைக்கும் சென்னை இரவு… மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் பரிதாப பலி… கண்ணிமைக்கும் நேரத்தில் சோகம்….!

சென்னை அண்ணா நகரில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து, கலாவதி என்ற பெண் உயிரிழந்த சம்பவம்…

8 minutes ago

“நான் எஸ்பி-யோட சொந்தக்காரன்!”… சிறுவன் மீது காரை ஏற்றிவிட்டு மிரட்டிய போதை ஆசாமி… மக்கள் கொடுத்த தரமான பதிலடி…!!

மதுரை பாண்டிகோவில் முதல் சிவகங்கை வரையிலான சாலையில், அண்ணாநகரைச் சேர்ந்த சந்தோஷ் யாதவ் என்பவர் கடுமையான மதுபோதையில் காரை ஓட்டிச்…

11 minutes ago

அடுத்த 6 மாசத்துல அதிமுக காலி…. இபிஎஸ் தூக்கம் போச்சு…. 25 எம்.எல்.ஏக்களுடன் பிளன் பண்ணும் செங்கோட்டையன்?… தமிழ்நாடு அரசியலில் அடுத்த பூகம்பம்….!

அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவிலிருந்து 10 எம்.எல்.ஏ.க்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணையத் தயாராக இருப்பதாகக் கூறியிருப்பது தமிழ்நாட்டின் அரசியல் களத்தில்…

14 minutes ago

“10 நிமிஷம்… அதிகம் பேசினால் இங்கேயே கொன்னுடுவேன்…” சொமேட்டோ ஊழியரை மிரட்டிய ஹோட்டல் மேனேஜர்… பகீர் பின்னணி…!!

சொமேட்டோ உணவு விநியோக ஊழியர் ஒருவர் ஆர்டரை வாங்குவதற்காக உணவகம் ஒன்றுக்குச் சென்று சுமார் 10 நிமிடங்கள் காத்திருந்துள்ளார். ஆர்டர்…

21 minutes ago

“இது இந்தியாவா இல்ல சுவிட்சர்லாந்தா?!… மேற்கு தொடர்ச்சி மலையில் சீறிப்பாய்ந்த ரயில்… வந்தே பாரத்தில் ஒரு அட்டகாசமான ஜர்னி ரெடி…!!

பெங்களூரு மற்றும் மங்களூரு நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்குவதற்கான சோதனை ஓட்டங்கள் தற்போது தீவிரமாக நடைபெற்று…

24 minutes ago

“எங்களுக்கு அப்புறம் யாருமே வரமாட்டாங்கன்னு சொன்னாங்களா?”…. துரைமுருகனின் நச் பதில்….. ஆடிப்போன தவெக….!

வேலூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழக வெற்றி பெற்ற கழகம் தொடர்பாக திமுக பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்த…

32 minutes ago