“நான் எஸ்பி-யோட சொந்தக்காரன்!”… சிறுவன் மீது காரை ஏற்றிவிட்டு மிரட்டிய போதை ஆசாமி… மக்கள் கொடுத்த தரமான பதிலடி…!!

Spread the love

மதுரை பாண்டிகோவில் முதல் சிவகங்கை வரையிலான சாலையில், அண்ணாநகரைச் சேர்ந்த சந்தோஷ் யாதவ் என்பவர் கடுமையான மதுபோதையில் காரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையில் சென்றுகொண்டிருந்த சிறுவன் மீது காரை மோதிய அவர், வாகனத்தை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். விபத்தில் சிறுவன் காயமடைந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக அந்த காரை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர்.

பொதுமக்களிடம் சிக்கிய சந்தோஷ் யாதவ், தான் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ருஷ்டி சிங்கின் உறவினர் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால், காரின் உள்ளே மதுபாட்டில்கள் இருந்ததைக் கண்ட மக்கள், அவரைப் பிடித்து அண்ணாநகர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய பரிசோதனையில் அவர் மது அருந்தியிருப்பது உறுதியானதை அடுத்து, காரை பறிமுதல் செய்ததோடு சந்தோஷ் யாதவை அதிகாரப்பூர்வமாக கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Gayathri

Recent Posts

சீச்சீ… இதை எப்படி சாப்பிடுறது…? கால்களால் மிதித்து மாவு பிசையும் தொழிலாளர்கள்…. இணையத்தில் கண்டனத்தை குவிக்கும் வீடியோ…!!

உணவுப் பொருட்கள் தயாரிப்பில் கால்களால் மாவை மிதித்துப் பிசையும் அதிர்ச்சிகரமான காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி…

1 minute ago

“தவெகவில் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள்?”… கொளுத்திப் போட்ட செங்கோட்டையன்… குதிரை பேரம் நடப்பது உண்மை தானா?… போட்டுத் தாக்கிய விசிக….!

தமிழக வெற்றிக் கழகத்தில் மேலும் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இணையத் தயாராக இருப்பதாக தவெக நிர்வாகி செங்கோட்டையன் பேசிய பேச்சு,…

16 minutes ago

அம்மாடியோ பார்க்கவே பயமா இருக்கு…! “20 குடும்பங்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றம்…” 7 மாடி கட்டிடம் அதிரடி இடிப்பு… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஹைதராபாத் கச்சிபௌலியில் உள்ள அஞ்சையா நகரில் அமைந்திருந்த 7 மாடி கட்டிடம் ஒன்றை ஹைட்ரா நிர்வாகம் இடித்துத் தள்ளியுள்ளது. அருகில்…

22 minutes ago

BREAKING: 5 தொகுதி இடைத்தேர்தல் ரத்து?…. சற்றுமுன் சுப்ரீம் கோர்ட் வழங்கிய அதிரடி உத்தரவு…..!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், தான் போட்டியிட்ட இரு தொகுதிகளில் பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு…

22 minutes ago

அவரு சட்டை போடல..! கல்யாணத்தில் நடந்த செம காமெடி… டிக்டாக்கை தெறிக்கவிடும் கலிபோர்னியா கல்யாண வீடியோ…!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், எதிர்பாராத ஒரு நபர் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளார். லா ஜொல்லா பகுதியில்…

23 minutes ago

பரந்தூரை கை விட்டுவிட்டீங்க… அதுக்கு பதிலா 5,500 ஏக்கரில் விமான நிலையமா?…. கொந்தளித்த அண்ணாமலை… CM விஜய்க்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி…!

சென்னைக்கு அருகிலுள்ள பரந்தூர் பகுதியில் 2-வது புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு…

27 minutes ago